தமிழகத்தில் போகி பண்டிகை கோலாகலம்! சென்னையில் டயர்களை எரித்து "கொண்டாட்டம்"
சென்னை: தமிழகத்தில் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மார்கழி மாதத்தின் கடைசி நாளும் இன்றாகும்.
போகி பண்டிகை தமிழ் மாதத்தின் மார்கழியில் கடைசி நாள் ஆகும். அதாவது பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என கொண்டாடி வருகிறார்கள்.

அதன்படி தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் போகி மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
பழைய பொருட்களை எரிப்பதால் சென்னையில் காற்று மாசு சற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் பொருட்களையே மக்கள் எரித்து வருகிறார்கள். இப்படி செய்ய வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் டயர், பிளாஸ்டிக் பொருட்கள், டியூப், துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரிக்கிறார்கள்.
இன்று மார்கழி மாதத்தின் கடைசி நாள் என்பதால் ஆங்காங்கே குளிர் காணப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications