சயனைடு நிரப்பிய 2 ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கும்.. சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சயனைடு நிரப்பிய இரண்டு ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிக்கும் என தலைமைப் பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இன்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு வந்த இமெயிலில், சயனைடு நிரப்பிய இரண்டு ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் பிற்பகல் 12.45 சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதனால் இஸ்லாமியர்கள் முன்னதாகவே நீதிமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோதனை நடத்தினர். தலைமை நீதிபதி அறை, வாகன நிறுத்தம், பொருட்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் எந்தவித வெடிப்பொருட்களும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் புரளி என தெரியவந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஐகோர்ட் தலைமை பதிவாளருக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மோப்ப நாய் மற்றும் நிபுணர் குழுவுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், இந்த மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications