திடீர் ஃபோன் கால்..! நடிகர் விஜய் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த போலீஸ்..! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அவரது வீட்டுக்குச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து வருகின்றன.

அவரது அண்மைக்கால படங்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட விஜய் தனது இசை வெளியீட்டு விழாக்களில் தனது குட்டி ஸ்டோரி மூலம் அரசியல் பேசுவார்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

இவையெல்லாம் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தும். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து விஜய் பேசிய வசனங்கள் பெரும் விவாதத்தை கிளப்பின. அது போல் அவரது வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனை, அதற்கு அவர் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ஒரு பதிலடி கொடுத்தார். அதாவது உசுப்பேத்துனா உம்முனும், கடுப்பேத்துனா கம்முனு இருக்கணும் என பேசியிருந்தார்.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

அது போல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது விஜய் சைக்கிளில் போய் வாக்களித்தார். அதுவும் கருப்பு, சிவப்பு ஹெல்மெட் அணிந்து கொண்டு அந்த நிறத்தினாலான சைக்கிளில் சென்றார். பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து விஜய் இவ்வாறு சைக்கிளில் சென்றதாகவும் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அந்த நிறத்தை தேர்வு செய்ததாகவும் விவாதம் எழுந்தது.

சைக்கிள்

சைக்கிள்

ஆனால் தனது வீட்டிலிருந்து வாக்குச் சாவடி அருகே இருந்ததால் சைக்கிளில் சென்றதாக விஜய் தரப்பு விளக்கமளித்தது. அது போல் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கணிசமான வெற்றியை பெற்றுள்ளனர். ஏற்கெனவே களத்தில் பல கட்சிகள் இருந்த போதிலும் புதிதாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் வென்றது உண்மையில் மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியான சம்பவமாகவே உள்ளது.

தொலைபேசி மிரட்டல்

தொலைபேசி மிரட்டல்

அதிலும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அழைத்து விஜய் போட்டோ எடுத்துக் கொண்ட போது இது உங்கள் வெற்றி என கூறி குரூப்பில் கடைசியாக உட்கார்ந்திருந்தார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது.

விஜய் வீட்டில் புரளி

விஜய் வீட்டில் புரளி

தகவலறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அது புரளி என தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பது தெரியவந்தது. இவர் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+