ஓஎம்ஆர் சாலையில் ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அச்சத்தில் ஊழியர்கள்
சென்னை: சென்னையை அடுத்த கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
பழைய மகாபலிபுரம் சாலை எனப்படும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

அங்குள்ள செக்யூரிட்டி அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து அறிந்த காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
உடனடியாக ஊழியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த நிறுவனத்தின் 13 மாடிகளையும் சோதனையிட்டனர். சுமார் 4 மணி நேர சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இன்று இந்த நிறுவனத்தில் கான்பிரன்ஸ் ஒன்று நடக்க உள்ளது. இதனால் தொழில் போட்டி காரணமாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போனில் தொடர்பு கொண்ட மர்மநபரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications