முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... புரளி கிளப்பிய நபர் கைது
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகளில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், தகர்க்கப் போவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மிரட்டல் போன் வந்தது.

இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்த திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இதே போல கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீடு, மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications