விஜய்யின் நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு இருக்கு! நள்ளிரவில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட நபர் ஒருவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருக்கிறது என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து விஜய் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அது புரளி என தெரியவந்தது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் வீடு சென்னை நீலாங்கரையில் உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போன் செய்துள்ளார். விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லிவிட்டு உடனே இணைப்பை துண்டித்துள்ளார்.

விஜய் வீட்டில் சோதனை
இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு அதிகாலையிலேயே சென்ற போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். அங்குலம் அங்குலமாக தேடிப்பார்த்ததில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் போலீசில் சிக்கியுள்ளார். முகமது சபீக் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் கைது செய்தனர். எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தொடரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள்
ஏற்கனவே கரூர் துயர சம்பவத்திற்கு மறுநாள் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pooja Bumper Lottery:பூஜா பம்பர் லாட்டரி வந்தாச்சு..கேரளாவில் கோடி கோடியாக கொட்டப்போகும் அதிர்ஷ்டசாலி!குலுக்கல் எப்போது
சமீப நாட்களாகவே பிரபலங்கள் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லி இமெயில் மூலமாக மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நடிகர் எஸ்வி சேகர் வீட்டுக்கும் அடிக்கடி இதுபோன்ற போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் நடக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி
இதேபோல் சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் சமீபத்தில் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் வீட்டிற்கு சென்று நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. இது போன்று அடிக்கடி போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.












Click it and Unblock the Notifications