தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பதறிப்போன புஸ்ஸி ஆனந்த்.. பனையூரில் பரபரப்பு!
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே அரசியல் கட்சித் தலைவர்கள், பொது இடங்கள், திரைப் பிரபலங்களின் வீடுகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சோசியல் மீடியா மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் வந்தது.

டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், காவல்துறையினர் உடனடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அது புரளி என்று கண்டுபிடிப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
இரவு நேரத்தில் டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அடுத்த 30 நிமிடங்கள் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்ப கருவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து அடுத்த சில நிமிடங்களிலேயே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் காத்திருக்க வைக்கப்பட்டார். இதன்பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று நிபுணர்கள் கண்டுபிடித்த பின்னரே, அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக பனையூரில் சில மணி நேரங்களாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்?












Click it and Unblock the Notifications