ஸ்ரீதேவி சொத்து.. போனி கபூர் போலி ஆவணம் மூலம் பட்டா பெயர் மாற்றம்.. எதிர்மனுதாரர் சிவகாமி பேட்டி
சென்னை: போனி கபூர் போலி ஆவணங்கள் வைத்து பட்டா ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்துள்ளார். சம்பந்த முதலியார் பேத்தி என்ற முறையான ஆவணங்கள் உள்ளது, அவரின் மகள் மற்ற பிள்ளைகள் சொத்தை சேர்த்து விற்பனை செய்துள்ளார் அதற்கு உரியவர்கள் சேர்ந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம் என போனி கபூர் தொடர்ந்துள்ள வழக்கின் எதிர் மனுதாரர் சிவகாமி என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில் முன்பு மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்து அபகரிப்பு விவகாரம் தொடர்பாக கணவர் போனி கபூர் தொடர்ந்த வழக்கின் எதிர் மனுதாரர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988ல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கி உள்ளார்.

கடந்த, 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என்று கூறி வருவதாகவும் முதல் மனைவி உயிரோடு இருந்த போது, தன்னை திருமணம் செய்து கொண்டதாக, சந்திரசேகரின் இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால், மூவரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாக கூற முடியாது.
எனவே, மூவரும் மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் தாசில்தார் ஆகியோரிடம் அளித்த விண்ணப்பத்தை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று ஶ்ரீ தேவி கணவர் போனி கபூர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்ட நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நான்கு வாரங்களில் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதேவி சொத்தை வாங்கிய சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவியின் மகள் புழுதிவாக்கத்தை சேர்ந்த சிவகாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், 266 ஏக்கர் 1947 ஆம் ஆண்டு சம்பந்த முதலியார் பெற்ற சொத்து. அவருக்கு ஐந்து மகன்கள் என் தந்தை இரண்டாவது மகன். என் தாத்தாவின் வாரிசுகளில் ஒருவரான ராணியம்மாள் ECR யில் 4 ஏக்கர் 17 சென்ட் இருந்த இடத்தை மற்றவர்கள் கவனம் இல்லாமல் விற்பனை செய்துள்ளார். அதை சரியாக விசாரிக்காமல் நடிகை ஶ்ரீ தேவி வாங்கியுள்ளார். 35 ஆண்டுகளாக பட்டாவை பெயர் மாற்றம் அவர்களால் செய்ய முடியவில்லை.
ஸ்ரீதேவி உயிரிழந்த பின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் இல்லாமல் போனி கபூர் போலியான சான்றிதழ் மூலம் பட்டாவை பெயர் மாற்றம் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாற்றம் செய்யும் முறை இது தொடர்பான விஷயங்கள் எங்கள் கவனத்திற்கு வரவில்லை.
உயர் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் நான் போட்ட போது 12 வாரத்தில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்பொழுது போனி கபூர் பெட்டிஷன் போட்டு இருக்கிறார். இதற்கு நான்கு வாரங்களில் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள்.
முறையாக விசாரித்தால் அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது நிச்சயம் அதை சமர்ப்பிப்பேன். போனி கபூரிடம் எந்தவிதமான ஆவணமும் இல்லை. இதற்கிடையில் போனி கபூர் இந்த இடத்தை விற்க பார்க்கிறார். எங்களுக்கு உரிமை உள்ள சொத்தில் முழுமையான தீர்ப்பு கிடைக்கும் வரை போனி கபூர் இந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது" இவ்வாறு கூறியுள்ளார். முழு பேட்டியை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications