அதெப்படி அப்படி பேசலாம்.. கோபத்தில் இளைஞரின் விரலைக் கடித்து துப்பிய ‘குடி’மகன் தலைமறைவு
சென்னையை அடுத்த புழலில் குடிபோதையில் ஒருவரின் விரலை கடித்து துப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னையை அடுத்த புழல் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறின் போது விரலை நீட்டி பேசிய நபரின் கட்டை விரலை கடித்து பற்களை உடைத்த குடிமகனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள காவாங்கரை மகாவீர் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் ( 38 ). இவர் நேற்றிரவு மதுபோதையில் தனது வீட்டின் அருகே தனது நண்பர் முனுசாமி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே சென்ற அதே பகுதியை சேர்ந்த கோபி( 27 ) என்பவருக்கு பிரதீப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. வாய் வார்த்தைகளில் ஆரம்பித்த சண்டை கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
தனது முகத்திற்கு நேராக ஆள்காட்டி விரலை நீட்டி பிரதீப் பேசியதால் கடும் கோபமடைந்த கோபி, பிரதீப்பின் முகத்தில் கடுமையாக தாக்கினார். இதில் பிரதீப்பின் பற்கள் உடைந்து வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. அப்போதும் ஆத்திரம் தீராத கோபி, பிரதீப்பின் வலது கை ஆள்காட்டி விரலையும் கடித்து துப்பினார் .
இதனால் பலத்த காயமடைந்த பிரதீப் வலியில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ரத்த காயங்களுடன் இருந்த பிரதீபை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பிரதீப் அளித்த புகாரின் பேரில், புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விரலை கடித்து துப்பிய கோபி தலைமறைவாகிவிட்டார். அவரது சகோதரர்களான சத்யநாராயணன் , பிரேம் விஸ்வரூபன் ,உறவினர் கௌரிசங்கர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவான கோபியை போலீசார் தேடி வருகின்றனர் .
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications