Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நசுங்கிய 2 கால்களும் அகற்றம்.. அரசு பஸ்சில் தொங்கி கீழே விழுந்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கதி! ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை குன்றத்தூரில் சமீபத்தில் அரசு பஸ்சில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை பாஜக நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் திட்டி தாக்கியதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே நேற்று அரசு பஸ்சின் படிக்கட்டில் தொங்கி சென்ற பள்ளி மாணவன் கீழே விழுந்ததில் சக்கரம் ஏறி நசுங்கிய 2 கால்களும் அகற்றப்பட்டுள்ள சோகம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதாவது பள்ளி, கல்லூரி நேரத்தில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என மாணவர்கள் கூறுகின்றனர்.

Both the legs of school student amputated who fell off a government bus in Chennais Kundrathur

அதேவேளையில் சில இடங்களில் மாணவர்கள் வேண்டுமேன்றே படிக்கட்டுகளில் தொங்கியபடி சாகசம் செய்தும் வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பல இடங்களில் பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சின் ஜன்னலில் தொங்கியபடி செல்வதும், பஸ்சை பிடித்தபடி கால்களை தரையில் உரசியபடி செல்வதும், ஓடும் பஸ்சில் ஏறுவது உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்பு சென்னை குன்றத்தூரில் இருந்து போரூருக்கு சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளரும், நடிகையமான ரஞ்சனி நாச்சியார் திட்டி தாக்கி இரந்தார். மாணவர்களை இறங்குடா நாயே.. அறிவு இல்லையா என பேசி அடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவம் நடந்த குன்றத்தூர் அருகே நேற்று இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவன் கீழே விழுந்து 2 கால்களையும் இழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. இப்படி கால்களை இழந்துள்ள மாணவன் பெயர் சந்தோஷ். இவர் சென்னை குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

Both the legs of school student amputated who fell off a government bus in Chennais Kundrathur

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சந்தோஷ் சக மாணவர்களுடன் அரசு பஸ்சில் பயணித்துள்ளார்.பஸ்சின் முன்பக்க படியில் அவர் தொங்கியபடி சென்றார். குன்றத்தூர் தேரடி பகுதியை பஸ் கடந்தபோது எதிர்பாராத விதமாக சந்தோஷ் படிக்கட்டில் இருந்த தவறி கீழே விழுந்தார். பஸ்சின் பின்பக்க சக்கரம் அவரது இரு கால்கள் மீதும் ஏறியுள்ளது. இதில் சந்தோஷின் கால்கள் நசுங்கின.

படுகாயமடைந்து துடிதுடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் மாணவனின் 2 கால்களும் அகற்றப்பட்டன. மேலும் மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு இன்னொரு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+