Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூளையே ஜெகன்மூர்த்தி தான்.. சிறுவன் கடத்தலில் முன்ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு - பரபர வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவரை கடத்திய புகாரில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி மீது பரபரப்பான குற்றசசாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் கோரிய மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது முன்ஜாமீன் கோரி ஜெகன்மூர்த்தி தரப்பு வாதாடிய நிலையில் இந்த கடத்தலுக்கு மூளையே ஜெகன்மூர்த்தி தான். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியை சேர்ந்த பெண்ணும் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் 2 பேருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறிய பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

poovai jaganmoorthy chennai

இதில் அந்த பெண்ணுக்கு பல நூறு கோடி சொத்து இருக்கிறது. இதனால் இந்த காதல் திருமணத்துக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் சிலர் அந்த இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து 17 வயது நிரம்பிய அவரது தம்பியை கடத்தி சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவி குப்பம் தொகுதியின் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி ஜெயராமன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல்வாதி, ஐபிஎஸ் அதிகாரி மீதான இந்த குற்றச்சாட்டுகளால் விசாரணை சிபிசிஐடி வசம் வழங்கப்பட்டது.

பூவை ஜெகன்மூர்த்தியிடம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அதேவேளையில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இதனால் இந்த வழக்கு சூடுபிடித்தது. அதுமட்டுமின்றி விரைவில் பூவை ஜெகன்மூர்த்தியும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதன்பிறகு மனு மீதான விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளார். அவருக்கும், இந்த கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ‛‛விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பவரை ஏன் கைது செய்ய வேண்டும்'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி வாதத்தை முன்வைத்தார்.

அப்போது அவர், ‛‛ ஜெகன்மூர்த்தி கைது செய்ய அனுமதிக்க வேண்டும். அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது. ஏனென்றால் கைது செய்யப்பட்டவர்களுடன் ஜெகன்மூர்த்தி இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ள. இந்த கடத்தலுக்கு ஜெகன்மூர்த்தி தான் மூளையாக உள்ளார். அதேபோல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி உடனானா தொடர்பு பற்றி அவரிடம் விசாரிக்க வேண்டும். இதனால் முன்ஜாமீன் வழங்க கூடாது'' என்று வாதிடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+