பிராமணர் எதிர்ப்புக்கு பணிந்தார் முதல்வர் விஜய்.. அறநிலையத்துறை செயலாளர் இடமாற்றத்தின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் மற்றும் செயலாளராக பிரமாணர் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வர் விஜய் நியமனம் செய்தார். இதற்கு திமுகவினர் மற்றும் திராவிட கழக தலைவர் கி வீரமணி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்தான் எதிர்ப்புக்கு பணிந்த முதல்வர் விஜய் அறநிலையத்துறை செயலாளரை இடமாற்றம் செய்து அந்த பொறுப்புக்கு சென்னை மாநகர முன்னாள் ஆணையர் குமரகுருபரனை நியமனம் செய்துள்ளார். என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அமைச்சரவையில் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் என்பது கொடுக்கப்படாது. குறிப்பாக பிராமணர் எதிர்ப்பு அரசியலை தீவிரமாக திமுக மேற்கொண்டு வருகிறது.

brahmin-caste-controversy-swarna-ias-replaced-by-kumaragurubaran-ias-for-hrce-secretary

அதிமுகவை எடுத்து கொண்டால் ஜெயலலிதா முதல்வராக இருப்பார். அவரது அமைச்சரவையிலும் கூட பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் தற்போது விஜய் அமைச்சரவையில் 2 பிராமணர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.

2 பிராமண அமைச்சர்கள்

சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் 2 பிராமணர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் வெற்றி பெற்றனர். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தவெகவின் வெங்கட்ரமணன் மற்றும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் 2 பேருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் வெங்கட்ரமணன் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சராகவும், ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதற்கும் திமுக மற்றும் அதன் தோழமை இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

அறநிலையத்துறை விவகாரம்

குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த ரமேஷ், துறையின் செயலாளராக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த எஸ் ஸ்வர்ணா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.

திக தலைவர் வீரமணி

இதுபற்றி திக தலைவர் கி. வீரமணி தனது எக்ஸ் பக்கத்தில், ''அறநிலையத்துறைக்கு அமைச்சர் - முதன்மை செயலாளர் இருவரும் பார்ப்பனர்கள்? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் என்ன ஆவது?.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவரையோ, பெண் அமைச்சரையோ நியமித்தால் அதுதான் மாற்றம்.. போராடி இழுத்து வந்த சமூக நீதி தேரை பின்னுக்கு தள்ளுவதா? முதலமைச்சர் உடனடியாக விழித்து கொண்டு அமைச்சரையும், செயலாளரையும் மாற்ற வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

இந்நிலையில் தான் நேற்று மாலையில் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் பெற்றிருந்தனர். அதில் இந்து சமய அறநிலையத்துறையில் செயலாளராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ் ஸ்வர்ணா இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் அறநிலையத்துறை செயலாளர் பதவியில் இருந்து சுற்றுலா, கலாசாரம் மற்றும் சிறப்பு முன்னெடுப்புகள் துறையின் முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்கு பதில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் குமரகுருபரன் அறநிலையத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமரகுருபரன் வணிக வரி, பத்திரப்பதிவு மற்றும் அறநிலையத்துறையின் செயலாளராக செயல்படுவார் என்று நேற்று தலைமை செயலாளர் சாய் குமார் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிந்தார் விஜய்

இதன்மூலம் விஜய் அறநிலையத்துறையின் அமைச்சர், செயலாளர் என 2 பேரும் பிராமணர்களாக இருக்க கிளம்பிய எதிர்ப்புக்கு பணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+