ஆர்.எஸ். பாரதியை கண்டித்து பிராமணர் சங்கத்தினர் கண்டன போராட்டம்.. எஸ்வி சேகர் கடும் தாக்கு
சென்னை: பிராமணர்களை பற்றி தரக்குறைவாகப் பேசிய ஆர்.எஸ்.பாரதியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என பிராமணர்கள் சங்க கூட்டத்தில் எஸ்வி சேகர் வலியுறுத்தினார்..
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் இளைஞரணி அலுவலகம்ன அன்பகத்தில் கலைஞர் வாசகர்வட்டக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும், பத்திரிகைகளையும் தரக்குறைவாக விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் பாஜக.வின் எச்.ராஜாவையும் அவர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தார்கள். அதன்பின்னர் ஆர்எஸ் பாரதி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக, திகவின் பிராமண எதிர்ப்பு பிரச்சாரங்களை கண்டித்து நங்கநல்லூரியில் பிராமண சங்கங்கள் சார்பில், நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில . நடிகர் எஸ்.வி.சேகர், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன், உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்க நிறுவன தலைவர் கே.சிவநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இந்துக்களுக்கும், இந்துக்களின் அங்கமாக விளங்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேசுபவர்களை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானிக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் ஊடகத்தினரை கண்டிக்க வேண்டும், பிராமணர்களை எதிர்ப்பவர்களை அரசியலில் இருந்து காணாமல் போக செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் எஸ்.வி.சேகர் பேசுகையில், ''அரசியல் சாசன சட்டத்தின்படி வாழ்பவர்கள் பிராமணர்கள். சாதி, மதகலவரம் தூண்டுபவர்கள் நாங்கள் அல்ல. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக நடந்துகொண்ட ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பவேண்டும். இனிவரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்'' இவ்வாறு கூறினார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேசுகையில், ''ஆர்.எஸ்.பாரதி பேசியது அவரது சொந்தக் கருத்து அல்ல, அது திமுகவின் கருத்து. ஆகவே ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications