வீடியோவை பார்த்து கோபப்பட்ட எடப்பாடி.. பயங்கர முடிவு! தமிழ்நாட்டில் முக்கோண மோதல்.. திமுக ஹாப்பி?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி மோதல் உச்சத்தில் உள்ள நிலையில், இரண்டு தரப்பின் கூட்டணி முறிந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கும் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அவர் இன்று எடுத்த முடிவு காரணமாக தமிழ்நாட்டில் முக்கோண கூட்டணி மோதல் நடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில்தான் பாஜக அதிமுக கூட்டணி உடைந்தது. பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று அதிமுக அறிவித்தது. அதன்பின் மறுநாளே அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் பேச கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக செய்திகள் வந்தன.

அண்ணாமலை: அண்ணாமலையின் ஒரு பேச்சுதான் இந்த மோதலுக்கு காரணமாக அமைந்தது. அண்ணாமலை தனது பேச்சில், முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார். இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வீடியோ: அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக கால் செய்து எடப்பாடியிடம் பேசி உள்ளனர். அதில்.. நீங்கள் தானே பொதுச்செயலாளர் . நீங்கள் தானே மூத்த தலைவர். அவர் என்ன உங்களை பற்றியே இப்படி பேசுகிறார். இதெல்லாம் சரியா. சின்ன பையன் நம்மை கேள்வி கேட்கிறார், மோசமாக பேசுகிறார், என்றுள்ளனர். இதையடுத்து அண்ணாமலையின் வீடியோவை பார்த்து எடப்பாடி பழனிசாமியும் கோபம் அடைந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து எடப்பாடி கோபத்தின் உச்சிக்கே போய் உள்ளார். இதன் பின்பே கூட்டணி முறிவு முடிவை எடுத்துள்ளார்.
அண்ணாமலை மழுப்பல்: இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணி குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் மழுப்பலாக பேசினார். அவர் பேச்சில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது! கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான்.
இபிஎஸ்ஸை அடுத்த முதல்வராக்குவோம் என நான் கூற முடியாது. நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உச்சம்: இந்த நிலையில் இன்று அதிமுக - பாஜக கூட்டணி முறிவதாகஅறிவிக்கப்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கும் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். தனியாக கூட்டணி அமைப்போம் என்ற முடிவை எடப்பாடி எடுத்துள்ளார்.

முக்கோண மோதல்: இதனால் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, திமுக கூட்டணி என்ற முக்கோண மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. திமுக கூட்டணி ஏற்கனவே வலிமையாக இருப்பதால் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் வாய்ப்புகள் உள்ளன.
முக்கியமாக சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக ஆகியவை திமுக கூட்டணியை முறிக்க வாய்ப்புகள் குறைவு. இதனால் எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் திமுக - அதிமுக - பாஜக மும்முனை மோதலால் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் வாய்ப்புகள் உள்ளன.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications