திமுக இமேஜை உடையுங்கள்.. ஓட விட்டு தனிமைப்படுத்துங்கள்.. விஜய்க்கு வைகோ தந்த பயங்கர ஐடியா!
சென்னை: திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்பதையும், மக்கள் பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பல்வேறு வழிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும் மக்களிடம் அம்பலப்படுத்தி திமுகவின் இமேஜ்ஜை காலி செய்வதுதான் தவெக அரசின் முதன்மை இலக்கு என்கிற திட்டத்தில் இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
இந்த யோசனையை அவருக்கு அழுத்தமாக வலியுறுத்தியிருப்பது வைகோ என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆம் திமுகவின் கூட்டணியில் இத்தனை காலம் இருந்த.. மகன் துரை வைகோவை திமுகவின் முக்கிய தலைவர்கள் கேஎன் நேரு உள்ளிட்டோர் செய்த பிரச்சாரம் மூலம் எம்பியாக்கிய அதே மதிமுக வைகோதான் விஜய்க்கு இந்த ஐடியாவை கொடுத்துள்ளாராம்!

ஆயுதமாக மதிமுக இருக்கும்- வைகோ
தவெகவை எந்த சக்தி அழிக்க நினைத்தாலும் தவெகவை பாதுகாக்கும் ஆயுதமாக மதிமுக இருக்கும் என அண்மையில் சொல்லியிருந்தார் வைகோ. அதற்கு முன்னதாக, தோழமைக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு தலைவர்களை தனிப்பட்ட முறையில் தனது அறைக்கு அழைத்துச் சென்று 20 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார் விஜய். அந்த இரண்டு தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம், மற்றொருவர் வைகோ.
சிதம்பரத்துடன் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, திமுக அரசியல் பற்றி பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக தலைமையின் குடும்பம் மற்றும் திமுக வின் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரின் சொத்து குவிப்புகள் குறித்து விவாதித்திருக்கிறார்கள். அப்போது, 2-ஜி ஊழல் பற்றி விவரித்த சிதம்பரம், ''திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திலிருந்து வெளியேறிய கறுப்பு பணம் மட்டுமே 1 லட்சம் கோடி என ஒரு தகவல் மத்திய அரசுக்கு கிடைத்ததாக எனக்கு தகவல் கிடைத்தது.
அதில் பெரும்பாலும் திமுக தரப்பினருடையது. நானும் மத்தியில் நிதி அமைச்சராக, உள்துறை அமைச்சராக இருந்திருக்கி றேன். இவ்வளவு கறுப்பு பணத்தை எப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியும் என தெரியவில்லை. பலே மூளைக்காரர்கள் தான். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து உங்கள் அதிகாரிகளிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு நிறைய விபரங்கள் தெரிந்திருக்கலாம்'' என்று சொல்லியிருக்கிறார்.
திமுகவின் கட்டமைப்பு வலிமையாக இருக்கு
அதேபோல வைகோவிடம் விஜய் பேசும் போது, ''திமுகவின் கட்டமைப்பு வலிமையாக இருக்கும். அதனை என்னாலேயே அசைக்க முடியவில்லை. நீங்கள் முயற்சிப்பதும் வேஸ்ட் ஆஃப் டைம்தான். அதற்கு மாறாக, திமுகவின் இமேஜ்ஜை காலி செய்வது ஈஸி. அதை உங்கள் அரசால் செய்ய முடியும். எப்போதுமே இமேஜ் டேமேஜ் ஆவதை திமுக தலைமை விரும்பாது. திமுகவை ஊழல் சக்தி என்றும், கோடி கோடியாக மக்கள் பணத்தை கொள்ளை அடித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் ரீதியாக மக்களிடம் திமுகவை தனிமைப்படுத்தினாலே எல்லாம் முடிந்தது'' என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் வைகோ.
இரண்டு தலைவர்களின் யோசனைகளை உள்வாங்கிக்கொண்ட முதல்வர் விஜய், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு டிஜிபி மூலம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளாராம் விஜய். அதாவது, திமுக குடும்பத்தினர் மற்றும் திமுகவின் மாஜி அமைச்சர்களின் சொத்துக்குவிப்புகளை ஆதாரங்களுடன் திரட்டி தனது கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று கட்டளையி ட்டுள்ளார். மாஜிகளின் சொத்துக்குவிப்பு விபரங்களை மிக சீக்ரெட்டாக சேகரிக்கத் தொடங்கியுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை என்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications