Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காலை டிபன் சென்னையில்.. லஞ்ச் நியூயார்க்கில்!" - 30 நிமிட விண்வெளிப் பயணம்: எலான் மஸ்க் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் இப்போது சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமென்றால், குறைந்தது 18 முதல் 22 மணிநேரம் ஆகும். இரண்டு முறை விமானம் மாற வேண்டும், இடையில் துபாய் அல்லது லண்டனில் காத்திருக்க வேண்டும் என ஒரு பயணமே ஒரு யுகம் போலத்தான் பயணிகளுக்கு இருக்கும். ஆனால் காலை டிபன் சென்னையில் முடித்துவிட்டு லஞ்ச் நியூயார்க்கில் சாப்பிட முடியும் என்றால் நம்புவீர்களா.. நம்பித்தான் ஆக வேண்டும். 30 நிமிடத்தில் போகும் அளவிற்கு எலான் மஸ்க் மெகா திட்டம் வைத்திருக்கிறார். உண்மையில் அது எப்படி சாத்தியம் என்பதை அறிவியல் பூர்வமாக பார்ப்போம்.

நீங்கள் இப்போது சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமென்றால், குறைந்தது 18 முதல் 22 மணிநேரம் ஆகும். இரண்டு முறை விமானம் மாற வேண்டும், இடையில் துபாய் அல்லது லண்டனில் இறங்கி மாற வேண்டும். நமது இந்தியாவிற்கு அப்படியே பின்னால் மெக்சிகோவிற்கு உள்ளது. அதற்கு பக்கத்தில் அமெரிக்கா உள்ளது.

Breakfast in Chennai Lunch in New York Elon Musk s 30-Minute Space Trip is No Longer Sci-Fi

பூமிக்கு அடியில் சாத்தியமில்லை

பூமிக்கு அடியில் ஹைபர் லூப் போட்டு பயணிக்க வைக்க முடியுமா என்றால், அது நடைமுறையில் சாத்தியமில்லை.. ஏனெனில் கடுமையான வெப்பம் பூமிக்கு அடியில் இருக்கும். சூரியனுக்கு சமமான வெப்பம் இருக்கும். இப்போது உள்ள சூழலில் மனிதர்களால் அதிகபட்சம் 12 கிமீ தான் தோண்ட முடிந்துள்ளது.

பாயிண்ட் டூ பாயிண்ட் விண்வெளிப் பயணம்

எனவே தூரத்தைக் குறைக்க பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டுவதெல்லாம் தற்போதைக்குச் சாத்தியமில்லை என்பதால், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளது. அதுதான் பாயிண்ட் டூ பாயிண்ட் விண்வெளிப் பயணம்!

விமானத்தை விட 30 மடங்கு வேகம்: பூமிக்கு அடியில் செல்வதை விட விண்வெளி வழியாகச் செல்வதுதான் புத்திசாலித்தனம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்காகப் பயன்படுத்தப்பட உள்ள 'ஸ்டார்ஷிப்' ராக்கெட், உங்களைச் சுமந்துகொண்டு வளிமண்டலத்திற்கு மேலே பாயும். அங்கே காற்றின் உராய்வு இல்லாததால், ராக்கெட் மணிக்கு 27,000 கி.மீ வேகத்தில் மின்னல் வேகத்தில் செல்லும்.

பயண முறை எப்படி இருக்கும்?

சென்னையில் உள்ள கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஒரு ராக்கெட் தளத்திலிருந்து நீங்கள் புறப்படுவீர்கள்.

விண்வெளிப் பாதை: ராக்கெட் பூமியின் ஈர்ப்பு விசையைச் சாதகமாகப் பயன்படுத்தி, வளைவுப் பாதையில் விண்வெளி வழியாக நியூயார்க்கை நோக்கி நகரும்.

தரையிறங்குதல்: சரியாக 30-வது நிமிடத்தில், நியூயார்க் நகரின் ஹட்சன் நதிக்கரையில் உள்ள ஒரு தளத்தில் ராக்கெட் மெதுவாகத் தரையிறங்கும்.

யார் பயணிக்கலாம்?

தற்போது இது சோதனை நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் சாதாரண விமானக் கட்டணத்திலேயே (Business Class) இந்தப் பயணத்தை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது. "ஒரு சினிமா பார்ப்பதற்குள் உலகின் மறுமுனைக்குச் சென்றுவிடலாம்" என்பதே இந்தத் திட்டத்தின் தாரக மந்திரம்.

சாத்தியமாக போகிறது

சென்னையில் இன்று காலை அலுவலகத்திற்குப் போக டிராபிக்கில் சிக்கி நாம் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், நியூயார்க்கிற்கு அரை மணிநேரத்தில் செல்லும் இந்தத் தொழில்நுட்பம் கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து நியூயார்க் செல்வது, பக்கத்துத் தெருவிற்குப் போய் வருவது போல எளிதாகிவிடும்! இதில் கற்பனையில் இப்போது பேசினாலும், நிஜத்தில் சாத்தியம். உண்மையில் நியூயார்க்கில் இருந்து சென்னைக்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் செல்வதற்கான பயணத்தை திட்டமிடவில்லை. ஆனால் அந்த தூரத்தை அடையும் அளவிற்கு அதாவது உலகத்தையே ஒரு அரைமணி நேரத்தில் சுற்றும் வகையில் ராக்கெட் பயணத்திற்கு தான் ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+