மாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது!
அரிவாளால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: கல்யாண பெண்ணுடன் சேர்ந்து அரிவாளால் மண மேடையில் கேக் வெட்டிய மாப்பிள்ளை.. அந்த கேக்கை எடுத்து புது மனைவிக்கு ஊட்டியும் விட்டார்.. இப்போது நண்பர்களுடன் சேர்ந்தே "மாமியார்" வீட்டுக்கு போய்விட்டார் புதுமாப்பிள்ளை!
ரவுடி பினு எப்போது தன்னுடைய பிறந்தநாளின்போது அரிவாளால் கேக் வெட்டினாரோ, அதில் இருந்து இந்த கலாச்சாரம் ஃபேமஸ் ஆக ஆரம்பித்து... சில இளைஞர்களுக்கு தொத்தி கொண்டுவிட்டது.
ஆனால் பினுவை ரவுண்டு கட்டி போலீசார் தூக்கியது மட்டும் இந்த இளைஞர்களுக்கு ஏனோ தெரியாமலேயே உள்ளது... அப்படித்தான் இங்கு ஒரு கும்பல் கூண்டோடு சிக்கி உள்ளது.

மாப்பிள்ளை
கொஞ்ச நாளாகவே கல்யாண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் புதுமாப்பிள்ளை, மணப்பெண் மேடையில் நிற்க, நண்பர்கள் கூட்டம் சூழ நின்று கொண்டுள்ளனர். அவர்கள் முன்னால் ஒரு கேக் வைக்கப்பட்டு இருக்கிறது. அதனை கல்யாண பெண்ணுடன் சேர்ந்து மாப்பிள்ளை கேக் வெட்டி, முதல் கேக்கை மனைவிக்கு ஊட்டி விடுகிறார்.

மணமகள்
மாப்பிள்ளை கையில் ஒரு அரிவாள்,அதேபோல், இன்னொருத்தர் கையில் இன்னொரு அரிவாள் உள்ளது.. மணமகளிடம் தன் கையில் உள்ள அரிவாளை பிடிக்க சொல்கிறார் மாப்பிள்ளை.. இப்போது சேர்ந்து அரிவாளை தூக்கி பிடித்து போஸ் தருகிறார்கள்.. அண்ணனுக்கு ஜே என்ற சத்தமும் ஒலிப்பதை கேட்க முடிகிறது. பிறகு நண்பர்களில் ஒருவன் கத்தியை கையில் வைத்து கொண்டே ஒரு டான்ஸ் ஆடுகிறார்..

திருவேற்காடு
இந்த வீடியோதான் வைரலானது. இது சம்பந்தமாக திருவேற்காடு போலீஸார் விசாரணையை கையில் எடுத்தனர்... அப்போதுதான் மாப்பிள்ளை குறித்த பல விவரங்கள் வெளிவந்தன.. மாப்பிள்ளையை ஸ்டேஷனுக்கு கூட்டி சென்றனர்.. அவர பெயர் புவனேஷ், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில் பச்சையப்பன் காலேஜில் அன்று படிக்கும்போது மாப்பிள்ளைதான் ரூட் தலயாக இருந்திருக்கிறார்.

அரிவாள் பரிசு
எப்பவுமே இவர்கள் 10 பேர் கேங் ஒன்றாகவே இருப்பார்களாம்.. இப்போது புவனேஷ் தண்ணீர் பிசினஸ் செய்து வருகிறார். இவருக்கு 2 நாளைக்கு முன்பு தான் கல்யாணம் ஆனது.. பழைய ரூட் தல என்பதால், உடன் படித்த நண்பர்கள் எல்லாம் கல்யாணத்துக்கு வந்தனர்.. வந்தவர்கள் கிப்ட் என்ற பெயரில் ஒரு 3 அடி நீள அரிவாளை பரிசாக தந்திருக்கிறார்கள். அந்த அரிவாளால்தான் புதுமாப்பிள்ளை புவனேஷ் கேக்கை வெட்டியுள்ளார்.

விசாரணை
அதனை நண்பர்களே வீடியோவாக எடுத்தனர்.. கல்யாணத்துக்கு வராத மற்ற நண்பர்களுக்கு இந்த வீடியோவை ஷேர் செய்ய.. அது அப்படியே சோஷியல் மீடியாவில் பரவிவிட்டது. புதுமாப்பிள்ளையிடம் நண்பர்கள் குறித்த மற்ற விசாரணை நடந்து வந்த நிலையில், புவனேஷ் மற்றும் விக்கி, நிஷாந்த், மணி, கண்ணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அனைவரும் அவர்களுடைய பெற்றோருடன் அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உறுதிமொழி
மணமகன் புவனேஷ் உள்பட அவரது நண்பர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.. இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு, அவர்கள் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வீடியோவில் எல்லோருக்கும் முன்னாடி வந்து நின்று அரிவாளை சுழட்டிறயது, பச்சையப்பன் காலேஜில் படிக்கும் மோகன்குமார் என்பதும், அவர் ஏற்கனவே ரூட்டு தல பிரச்சினையில் சிக்கி உள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரைதான் போலீசார் இப்போது தேடி வருகிறார்கள்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications