சென்னைக்கு வந்துவிட்டது "ஜெட்".. இனி சாலையில் போகும்போது பிரச்சனையே இருக்காது.. மிளிர போகும் சாலைகள்
சென்னை: சென்னையில் பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் நடந்து வரும் நிலையில்தான் புதிதாக JET PATCHER இயந்திரம் சென்னையில் களமிறக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் களமிறக்கப்பட்டு உள்ள JET PATCHER இயந்திரம் என்பது சாலை போடும் இயந்திரம் ஆகும். அதாவது இது 2 மணி நேரத்தில் சாலையில் ஏற்பட்டு உள்ள குழிகளை சரி செய்துவிடும் .

அதிலும் பொதுவாக சாலைகளில் உள்ள குழிகளை சரி செய்ய சாலைகளை மூட வேண்டும். அதன்பின் அங்கே ஜல்லி போட்டு சமப்படுத்தி, அதன்மேல் தார் ஊற்ற வேண்டும். அதன்மேல் ரோலர் போட வேண்டும். இதற்கு பொதுவாக ஒருநாள் தேவைப்படும். அது காய இன்னொரு நாள் தேவைப்படும்.
ஆனால் சென்னையில் பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் நடந்து வரும் நிலையில்தான் புதிதாக JET PATCHER இயந்திரம் சென்னையில் களமிறக்கப்பட்டு உள்ளது. இது ரெடிமேட் சாலைகளை உடனே போட்டுவிடும். 2 மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்.
3 மணி நேரத்தில் சாலை போடப்பட்ட இடத்தில் இயல்பான போக்குவரத்து பணிகளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சாலைகளில் ரெடிமேட் முறையில் பேட்ச் அடைக்கும் எந்திரம் ஆகும் இது. இதனால் இனி சாலைகளை மூட வேண்டியது இல்லை.
ஐரோப்பாவில் இருந்து இந்த தொழில்நுட்பம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 434.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் சாலைகள் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது .
கொல்லிமலைக்கு சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள்
எளிதாக செல்ல நாமக்கல் மாவட்டத்தில் முடியும். உள்ள 21-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாய விளைப்பொருட்களை எளிதாக எடுத்துச்செல்ல முடியும்.
மேலும், திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் மற்றும் சாலையை அகலப்படுத்தும் பணி சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 58 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் - பொன்னேரி பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே - கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் மற்றும் சாலையை இரண்டு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட சாலை ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் ஏற்கனவே வலுவிழந்த நிலையில் இருந்த 5.50 மீட்டர் அகலம் கொண்ட குறுகிய பாலம், தற்போது அகலப்படுத்தப்பட்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் சி.பி.சி.எல் (CPCL), ஐ.ஓ.சி.எல் (IOCL), எம்.எஃப்.எல் (MFL) போன்ற தொழிற்சாலைகள் இயக்குவதால் இச்சாலையில் கனரக வாகனங்கள் பெருமளவில் இயக்கப்படுகின்றன. இப்புதிய பாலத்தால் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும், திருவொற்றியூரிலிருந்து மணலி, மாதவரம், மீஞ்சூர் மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். மணலியிலிருந்து தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, இராயபுரம் மற்றும் சென்னை செல்லும் வாகனங்களும் எளிதாக செல்ல முடியும்.
பல்லடம் - தாராபுரம் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக மாற்றியமைக்கும் பணி
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - தாராபுரம் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக 53
கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியுடன், குறுக்கு வடிகால் கட்டுதல், பேருந்து நிறுத்தம் அமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் சாலை மையத்திட்டு அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள், தேனீ வளர்ப்பு மற்றும் உற்பத்தித் தொழில்கள் ஆகியவை அருகாமையில் அமைந்துள்ள இச்சாலையானது, திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து செறிவு அதிகம் உள்ள சாலைகளில் ஒன்றாகும். பல்லடம் - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள நகரப்பகுதி மற்றும் சிற்றூர்களில் வசிக்கும் மக்களின் உயிர்நாடியாக இச்சாலை விளங்குவதால், இதன் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் காய்கறிகள் மற்றும் பணப்பயிர்களை பயிரிட்டு, பருவகாலங்களில் அருகிலுள்ள சந்தைப்படுத்தும் இடங்களுக்கு இச்சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த சாலையானது கோவை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும், பழனி போன்ற புனிதத் தலங்களுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் இணைப்பை மேலும் மேம்படுத்துகிறது.
கோயம்புத்தூர் நகரில், கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி
கோயம்புத்தூர் நகரில், தேசிய நெடுஞ்சாலை எண்.57ல் (நாகப்பட்டினம் - கூடலூர் - மைசூர் சாலை) கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கணபதி மணியகாரம்பாளையம் சாலை சந்திப்பில் 658 மீட்டர் நீளத்திற்கு 41 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இப்பாலத்தினால் ஜி.என் மில்ஸ் சந்திப்பு மற்றும் 4 இதர சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும். மேலும், துடியலூரிலிருந்து சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, காந்திபுரம், உக்கடம், பொள்ளாச்சி மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். ஜி.என் மில்ஸ் பாலத்தின் தள அளவில் காசிநஞ்சகவுண்டன்புதூர், கணபதி, உருமாண்டம்பாளையம், சின்ன வேடம்பட்டி, மணியக்காரன்பாளையம் மற்றும் சரவணம்பட்டி செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் . என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் . சிவ் தாஸ் மீனா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications