Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பயணிகளே நோட் பண்ணுங்க.. 24ஆம் தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம்.. எம்டிசி முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் 24 ஆம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படாது என எம்.டி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிராட்வேவில் இயக்கப்படும் பேருந்துகள் தீவுத்திடல், ராயபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக ராயபுரத்தில் இருந்து 155ஏ, 17ஈ, 17கே, 188சி, 188ஈடி, 18 ஏ,18டி, 18ஈ, 18கே, 18பி, 18ஆர், 18 ஆரெஸ்க், 21சி, 26பி, 26ஜி, 26எம், 51டி, 52 பி, 54 ஜி, 54எல், 60ஏ வழித்தட பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தீவுத்திடலில் இருந்து 6, 13 60ஈ, 102, 109,102சி, 102 கே, 21 ஜி, 21 ஈ, 21 எல் வழித்தட பேருந்துகள் இயக்கப்படும் என எம்டிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Broadway Bus Services to Be Temporarily Shifted to Royapuram and Island Grounds from January 24 2026

பிராட்வே பேருந்து நிலையம்

பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 24.01.2026 முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும்.

இராயபுரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு: 11, 21, 26, 52, 54, 60, 10E, 11G, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R.

ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 101CT, 101X, 53E, 53P, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150

அண்ணாசாலை மற்றும் ஈவேரா சாலை

அண்ணாசாலை மற்றும் ஈவேரா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து இராயபுரம் நோக்கி செல்லும் போது ஏற்கனவே அமைந்துள்ள Nurse Quarters பேருந்து நிறுத்தத்திலும், North Fort சாலையில் அமைந்துள்ள உயர்நீதி மன்றம் பேருந்து நிறுத்ததிலும் நின்று பயணிகளை இறக்கி, இராஜாஜி சாலை வழியாக இராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

இராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர்நீதி மன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

தீவுத்திடல் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு: 6, 13, 60E,102, 109, 102C, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET,

பீச்ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள்:
1, 4, 44, 330, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 560, 56D ET, 56J, 56K, 56P, 570, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, C56C ET, 557A ET,

மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33B, 56C, 56F.
ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 155, 156, 17D, 20A, 20D, 50ET, 50M,
வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 35, 42, 242, 1428, 142P, 35C, 428, 420, 42D, 42M, 640, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET

பீச் ஸ்டேசன் வழியாக

பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர்நீதி மன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது Esplanade சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம்

ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ஏற்கனவே அமைந்துள்ள Nurse quarters பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி வலது புறம் திரும்பி முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள பாரிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி NSC Bose சாலை, Esplanade சாலை வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து பீச்ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இடது புறம் திரும்பி Esplande சாலை. NSC Bose சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

காமராஜர் சாலை வழியாக

ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக வலது புறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை(G.H.) பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம், Esplanade சாலையில் வலதுபுறம் திரும்பி NSC Bose சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள Dare House பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+