Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 நாட்களில்.. சென்னையில் பயன்பாட்டிற்கு வருது.. புது பேருந்து நிலையம்! எங்கே தெரியுமா? சூப்பர் வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான்கு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு, பிராட்வே பேருந்து நிலையத்தை மறுவடிவமைக்கும் பணிகள் இறுதியாகத் தொடங்கப்பட உள்ளன. அந்தப் பேருந்து நிலையம் மூடப்பட்டு, ஜனவரி 24 ஆம் தேதி முதல் பேருந்துகள் ராயபுரம் மற்றும் திருவொற்றியூர் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும்.

ராயபுரம் ரயில் நிலையம் அருகே 3.45 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக பேருந்து நிலையம் 2 நாட்களில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamilnadu Bus

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், மாற்றாக, புதிய தற்காலிக பேருந்து நிலையம்
📍 இப்ராஹிம் தெருவுக்கும், ராயபுரம் ரயில் நிலையத்துக்கும் இடையில்
✅ நிழற்குடை, அமர்விடம்
✅ கழிப்பறை வசதி
✅ மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்தில் துவங்க உள்ளது. இதையொட்டி, ராயபுரம் பகுதியில் இப்ராஹிம் சாலையின் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி வெகு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராட்வேயை மாற்றியமைக்கும் வகையில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் மற்றும் குறளகம் கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்;

• இந்த வளாகம், நகரத்தின் பல பகுதிகளிலிருந்து எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையத்துடன் தடையில்லா ஒருங்கிணைப்பை வழங்கும் வகையில், நடைமேம்பாலம் (Foot Overbridges) மற்றும் சுரங்கப்பாதை வசதிகளுடன் அமைக்கப்படும்.
• இந்த திட்டத்திற்கான மொத்த பரப்பளவு 6.484 ஏக்கர். பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாக கட்டிடம் மொத்தம் 1,08,290.01 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதில் இரண்டு அடித்தள நிலைகள், ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் அடங்கும்.
• புதுப்பிக்கப்படும் குறளகம் கட்டடம் மொத்தமாக 22,794 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு அடித்தள நிலைகள், தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்கள் உள்ளன.
• இந்த திட்டத்தில், போக்குவரத்து வசதிகள் (Paratransit Facilities), சுரங்கபாதைகள், வெளிப்புற நடைபாதைகள் (External Foot Overbridges) மற்றும் உட்புற மூடப்பட்ட நடைபாதைகள் (Internal Covered Pathways) ஆகிய பிரத்யேக இடங்களும் அடங்கும், முழுத் திட்டத்திற்கும் மொத்தமாக 1,36,580.37 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.​

போக்குவரத்து மற்றும் வணிக மையம்:

• MMFC கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் பேருந்து நிறுத்தங்கள் இடம்பெறும். மொத்தம் 73 பேருந்து நிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன: (தரைத்தளத்தில் 36, MMFC-யின்முதல் தளத்தில் 23, மற்றும் குறளகத்தில் 14). இந்த வசதி ஒரே நேரத்தில் 3,250 பேர்பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• MMFC-யின் கட்டிடத்தில் இரண்டாவது முதல் எட்டாவது தளம் வரை அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
• குறளகம் கட்டிடத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் சில்லறை வணிக இடங்கள் அமைக்கப்படும், மூன்றாவது முதல் ஒன்பதாவது தளம் வரை அலுவலக இடங்கள்திட்டமிடப்பட்டுள்ளன.
• தடையில்லா பயணிகளின் சேவைக்காக ஒரு அடித்தளத்தில் பொதுவான குளிர்சாதன வசதியுடன்கூடிய நடைபாதை திட்டமிடப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம் மற்றும் வசதிகள்:

• MMFC மற்றும் குறளகம் வளாகங்களில் மொத்தம் 433 கார்கள் மற்றும் 1174 இரு சக்கரவாகனங்களை நிறுத்தும் வகையில் விரிவான வாகன நிறுத்துமிட வசதிகள் இருக்கும். இரண்டு கட்டிடங்களிலும் இரண்டாவது அடித்தளத்தில் அடுக்கு வாகன நிறுத்துமிடம் இருக்கும்.
• இந்த வளாகத்தில் 30 மின்தூக்கிகள் மற்றும் 27 நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும்.
• பல்வேறு தளங்களில் பிரத்யேக கழிப்பறை வசதிகள் வழங்கப்படும்.
• இந்த திட்டத்தில் மின்சார பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கான வசதிகளும் அடங்கும்.

இந்த லட்சியத் திட்டம் சென்னையின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு பெரிய படியை குறிக்கிறது, நவீன வணிகமற்றும் அலுவலக இடங்களுடன் ஒருங்கிணைந்த உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து மையத்தை உறுதியளிக்கிறது.

பிராட்வே பேருந்து நிலையம் - சிறப்பு திட்டம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுகழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடத்தை புதுப்பிப்பதற்கும், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் (Multimodal Facility Complex - MMFC) அமைப்பதற்குமான முக்கிய ஒப்பந்தம் Bridge and Roof Company (India) நிறுவனத்திற்கு ரூ.566.59 கோடி மதிப்பில்(GST தவிர்த்து) வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) சார்பாக சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+