தீவுத்திடலில் இல்லை.. வேறு இடத்திற்கு மாறும் பிராட்வே பஸ் நிலையம்! சென்னையின் ஹாட்ஸ்பாட்டில்
சென்னை: சென்னையின் மிகப்பெரிய மாநகர பேருந்து முனையமாக இருக்கும் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் நவீன கட்டமைப்புகளுடன் மறு வடிவமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிமாக தீவுத்திடலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. தற்போது தீவுத்திடலில் இல்லை, ராயபுரம் என்.ஆர்.டி. மேம்பாலம் அருகே தான் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
சென்னையின் பழமையான பேருந்து நிலையங்களில் ஒன்றாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. இதை பூக்கடை பேருந்து நிலையம் என்றும் அழைக்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாக வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது மாநகர பேருந்துகள் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பிராட்வே பேருந்து நிலையத்தினை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்பொது பிராட்வே பேருந்து நிலையம் பழமையான கட்டமைப்புகளுடன் உள்ளதால், அதை இடித்துவிட்டு நவீனமயத்துடன் கட்டமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ 823 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் ''மல்டி மாடல் இன்டகிரேஷன்'' என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட இருக்கிறது. பிராட்வே பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில், 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளது.
கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது, பயணிகள் வசதிக்காக பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத்திடலுக்கு மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக ரூ. 5 கோடியும் ஒதுக்கப்பட்டது. எனினும், தற்போது வரை இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான், தீவுத்திடலுக்கு பதிலாக பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரம் என்ஆர்டி மேம்பாலம் அருகே தற்காலிமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறுகையில், "தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே, ராயபுரம் அருகே சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிமகாக அமைக்கப்படுகிறது.
நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளோம். பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் 45 குடும்பங்களை இடமாற்றம் செய்யவும் இடம் கண்டறியப்பட்டு இருக்கிறது. தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் வரும் 5-ந்தேதி தொடங்குகிறது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்" என்றார்.
1,400 சதுர மீட்டர் பரப்பளவில் 57 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைய இருக்கிறதாம். பயணிகள், பேருந்துகள் இடையூறு இன்றி வந்து செல்ல 3 நுழைவு பாதைகளுடன் இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பகுதி, கழிவறைகள், டைம் கீப்பர் அறை, குடி நீர் வசதி, இருக்கை வசதி , மேற்கூரைகளுடன் இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications