செதில் செதிலாக.. சிதைந்து போன எடப்பாடி கனவு.. திக்கு தெரியாமல் சிக்கிய அதிமுக.. என்ன நடந்தது?
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. அதிமுகவின் அரசியல் திட்டங்களில் பெரிய ஓட்டையை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி உள்ளன.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருந்தது. அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது. இதுவே அதிமுகவிற்கு பெரிய தோல்விதான். அதிமுக தேர்தலை புறக்கணித்து அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை.

இதில் 124053 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். 67757 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 56296 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10602 வாக்குகள் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. அதிமுகவின் அரசியல் திட்டங்களில் பெரிய ஓட்டையை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி உள்ளன. அப்படி அதிமுகவிற்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று பார்க்கலாம்.
சீமான் கூட்டணி காலி: அதிமுக - நாம் தமிழர் இடையே கூட்டணி உருவாக வேண்டிய சூழலில்.. சீமான் அந்த கூட்டணியை அடித்து உடைத்துள்ளார். சமீபத்தில் அதிமுக கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், அவர்கள் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என பல நிர்வாகிகள் தெரிவித்தனராம். எடப்பாடி பழனிசாமியும் கொஞ்சம் இதற்கு ஆதரவாக பேசி உள்ளாராம்.
அதன்படி நாம் தமிழருடன் கூட்டணி வைத்திருந்தால் நாம் லோக்சபா தேர்தலில் பெரிய வெற்றிபெற்று இருக்க முடியும். பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என நிர்வாகிகள் தெரிவித்தனராம். 1999 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இதே போன்று தேர்தல் தோல்விக்கு பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது நாம் மீண்டு வந்தோம். அதேபோல் நாம் மீண்டு வருவதற்கு சீமான் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் கூட இதை கொஞ்சம் வழிமொழிந்து பேசி உள்ளனர். சீமான் உடன் கூட்டணி வைத்தால் வடமாவட்டங்களில் வெற்றிபெற முடியும். அதிமுகவின் எழுச்சிக்கு சீமான் வருகை வசதியாக இருக்கும். திமுக தனியாக நிற்கவில்லை. பெரிய கூட்டணி வைத்துதான் போட்டியிடுகிறார்கள். அதேபோல் நாமும் பெரிய கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும். அதுதான் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று கூறி உள்ளார்.
சீமான் கோரிக்கை: முன்னதாக சீமானும் அதிமுகவின் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். அதன்படி, கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன்.
ஆனால் அதே சீமான் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களை தொடர்ச்சியாக ஏன் தலைவர்களை இழிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சீமான் சொன்ன பதிலில், ஜெயலலிதா இரண்டு திராவிட தலைவர்களின் சமாதிக்கு நடுவில் படுத்திருந்தா ஆமா நடுவுல படுத்திருக்கு என்று தானே சொல்ல முடியும் ? அது தப்பு என்றால் இனிமேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்குதுன்னு சொல்றேன் என்கிறார்.
ஆனால் அதே சீமான் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களை தொடர்ச்சியா ஏன் தலைவர்களை இழிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சீமான் சொன்ன பதிலில், ஜெயலலிதா இரண்டு திராவிட தலைவர்களின் சமாதிக்கு நடுவில் படுத்திருந்தா ஆமா நடுவுல படுத்திருக்கு என்று தானே சொல்ல முடியும் ? அது தப்பு என்றால் இனிமேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்குதுன்னு சொல்றேன் என்கிறார்.
அவரின் இந்த பேச்சு அதிமுகவினரை கடுப்பாக்கி உள்ளது. விக்கிரவாண்டியில், எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நாம் தமிழருக்கு இந்த ஆதரவை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை. இந்த கோபம் கூட சீமான் இப்படி பேச காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
சிதைந்த கனவு 2: ஒரு பக்கம் நாம் தமிழர் கூட்டணிக்கு எண்டு கார்டு போட.. இன்னொரு பக்கம் விக்கிரவாண்டி இடைதேர்தல் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தி கொடுத்துவிட்டது. ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் டாப் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஏற்கனவே இவர்கள் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பேசினார்கள். ஆனால் எடப்பாடி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
விரும்பவில்லை: இந்த நிலையில்தான் அதிமுகவில் சிலர் எடப்பாடியின் செயலை, அவர் எடுக்கும் முடிவுகளை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எடப்பாடிதான்.. தன்னை அதிமுகவின் முகமாக முன்னிறுத்துகிறார். தனக்கு போட்டியாக இருந்தவர்களை வெளியே அனுப்பியது அவர்தான். அப்படி இருக்க.. இப்போது தான் மட்டும் தனியாக பிரச்சாரம் செய்தேன்.. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்தார் என்று சொல்வது ஏன்? ஜெயலலிதா இப்படி தனியாகவே பிரச்சாரம் செய்வார். அவர் அதிமுகவை வெற்றிபெற வைக்கவில்லையா? ஓ பி எஸ் போன்று கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை வெளியே அனுப்பிய பின் எப்படி வெற்றி கிடைக்கும் என்று கட்சிக்கு உள்ளேயே நிர்வாகிகள் பேச தொடங்கி உள்ளனராம். எடப்பாடிக்கு எதிராக மீண்டும் நிர்வாகிகள் கொதித்து எழ இது முக்கியமான காரணமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு பக்கம் நாம் தமிழர் கூட்டணியும் போய்.. இன்னொரு பக்கம் கட்சிக்கு உள்ளேயே புரட்சி ஏற்படும் நிலைதான் அதிமுக உள்ளே ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications