கணவர் சென்றவுடன் கள்ளகாதலனுடன் உல்லாசம்.. போட்டு கொடுத்த அக்கம்பக்கத்தார்.. அடித்தே கொன்ற தம்பி!
சென்னை: எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கள்ளக்காதலனுடன் படுக்கை அறையில் இருந்த அக்காளை அவரது தம்பி அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (29). நேற்று முன் தினம் இரவு விஜயகுமார் வேலைக்குச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (26). இவர் சுப்புலட்சுமியின் தம்பி. தனது அக்காவை பார்க்க சுனாமி குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளார்.

பிரதாப் கதவை தட்டினார்
அப்போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பிரதாப் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து சுப்புலட்சுமி கதவை திறந்தார். அப்போது அவர் பதற்றமாக இருந்தார். இதனால் சந்தேகமடைந்த பிரதாப், சுப்புலட்சுமியிடம் விசாரித்தார். ஆனால் அவரோ மழுப்பலாக பதில் அளித்தார்.

கட்டிலுக்கு அடியில் கள்ளக்காதலன்
பின்னர் வீட்டுக்குள் சென்ற பிரதாப் அங்கும் இங்கும் சுற்றி சுற்றி பார்த்துள்ளார். அப்போது கட்டிலுக்கு அடியில் ஜானகி ராமன் என்பவர் இருந்தது தெரியவந்தது. அவரை இழுத்து போட்டபிரதாப் சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் ஜானகிராமன் தப்பியோடிவிட்டார். என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்ட பிரதாப், சுப்புலட்சுமியை சரமாரியாக அடித்துள்ளார்.

கொலை
பின்னர் அருகில் இருந்த தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்து விட்டு எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் சுப்புலட்சுமிக்கு ஜானகிராமனுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு இருந்துவந்ததாம். விஜயகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு ஜானகிராமன் சென்று உல்லாசமாக இருப்பது வழக்கமாம்.

எச்சரிக்கை
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் விஜயகுமாரிடமும் பிரதாப்பிடமும் தெரிவித்துள்ளனர். இருவரும் சுப்புலட்சுமியை எச்சரித்து கண்டித்துள்ளனர். எனினும் கணவருக்கும் தம்பிக்கும் தெரியாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். சம்பவத்தினத்தன்று ஜானகிராமன் சுப்புலட்சுமியின் வீட்டுக்குச் செல்வதை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டு பிரதாப்பிடம் தெரிவித்தனர்.

தம்பியிடம் சிக்கிய அக்காள்
இதனால் பிரதாப் தான் வருவதை சுப்புலட்சுமியிடம் சொல்லாமல் திடீரென வந்துள்ளார். அப்போது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த போது சிக்கிக் கொண்டார். இதையடுத்து பிரதாப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடித்தனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications