BSNL 4G இன்னும் கிடைக்கலையா? உடனே இதை செய்யுங்க! சிம்பிள் டிப்ஸ்
சென்னை: இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை கொடுத்து வருகிறது. ஆனால் இன்னமும் சிலர், தங்களுக்கு 4ஜி சேவை கிடைக்கவில்லை என்று புலம்பி வருகிறார்கள். சில சிம்பிள் டிப்ஸை ஃபாலோ செய்தால், உங்களுக்கும் சிக்னல் கிடைத்துவிடும்.
முதல் விஷயம் உங்கள் சிம் 4ஜி தானா? என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பழைய சிம்களில் 4ஜி டவர் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே, புதிய 4ஜி சிம்மை வாங்கி பயன்படுத்துங்கள். அப்போதும் 4ஜி சிக்னல் எடுக்கவில்லையெனில், நீங்கள் 4ஜி சிக்னல் எடுக்கும் பகுதியில் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

சென்னையில் இருக்கிறீர்கள் எனில், https://chennai.bsnl.co.in/kml/4g.html இந்த வெப்சைட்டுக்கு சென்று, எங்கெல்லாம் பிஎஸ்என்எல் 4ஜி டவர் கிடைக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். தடா தொடங்கி, புத்தூர் நகரி முதல் மரக்காணம் வரை 4ஜி தடையின்றி கிடைக்கிறது.
கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
1. மொபைலை பிளைட் மோடில் போட்டு மீண்டும், நார்மல் மோடுக்கு கொண்டு வந்து பாருங்கள். இப்படி செய்யும்போது, பெரும்பாலும் சிக்னல் ரி-ஸ்டார்ட் ஆகி, டவர் கிடைத்துவிடும். மொபைல் நெட்வொர்க் ஆன் ஆக சில விநாடிகள் ஆகலாம். அது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிக்கல். ஆனால் நிச்சயம் சில விநாடிகளுக்கு பிறகு டவர் கிடைத்துவிடும். இல்லையெனில் டேட்டா ஆன் செய்திருக்கிறீர்களா என்பதை மீண்டும் செக் செய்துக்கொள்ளவும்.
2. மொபைலை ரீ-ஸ்டார்ட் செய்வது இரண்டாவது ஆப்ஷன். இப்படி செய்வதன் மூலம் மொத்த நெட்வொர்க் செயல்முறையும் மீண்டும் முதலிலிருந்து தொடங்கும். எனவே, நீங்கள் உள்ள இடத்தில் 4ஜி கிடைக்கிறது எனில், உங்களும் இந்த சேவை கிடைக்கும்.
3. இந்த இரண்டு செயல் முறையிலும் பிரச்சனை சரியாகவில்லை எனில், போன் செட்டிங்ஸ்-க்கு போக வேண்டும். அதில் network and internet எனும் ஆப்ஷனுக்குள் போக வேண்டும். அதில் Mobile network என்கிற ஆப்ஷன் இருக்கும். இதில் ரோமிங் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
4. இதில் Advance என்கிற மற்றொரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், Preferred network type என்கிற ஆப்ஷன் இருக்கும். அதில் 3ஜி என்று இருந்தால், அதை 4ஜி என மாற்றிக்கொள்ளவும். அதேபோல, அடுத்து Automatically select network என்கிற ஆப்ஷன் ஆன் செய்யப்பட்டிருக்கும். அதை ஆப் செய்ய வேண்டும்.
5. இப்படி செய்தால் உடனே உங்கள் போனுக்கு வந்துக்கொண்டிருந்த சிக்னல் நின்றுவிட்டு, புதிய சிக்னல்களை போன் தேட தொடங்கும். அருகில் எந்தெந்த நிறுவனங்களின் சிக்னல் கிடைக்கிறது என்பதை இது நமக்கு காட்டி கொடுக்கும். அதில் BSNL 4ஜி, BSNL 3ஜி போன்ற சிக்னல்களும் காட்டும். நாம் BSNL 4ஜி என்பதை தேர்வு செய்ய வேண்டும். இது சில விநாடிகள் வரை நேரம் எடுக்கும். எனவே பொறுமை முக்கியம்.
6. இந்த நடைமுறை முடிந்தவுடன் செல்போனில் 4ஜி டவர் கிடைத்துவிடும். பிற்காலத்தில் பிஎஸ்என்எல் 5ஜி கொடுத்தாலும், சிக்னல் கிடைக்கவில்லை எனில் இதே நடைமுறையை பின்பற்றலாம். ஆனால், மீண்டும் Automatically selcet network என்கிற ஆப்ஷனை ஆன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தன்னிச்சையாக டவர் கனெக்ட் ஆகும்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications