வெறும் 1 ரூபாய்க்கு 1 ஜிபி.. ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் பிளானை கொண்டு வந்த பிஎஸ்என்எல்
சென்னை: 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது பிஎஸ்என்எல். ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக கூடுதல் டேட்டா வழங்கும் இந்த சிறப்பு பிளானை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது 4ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கத் தொடங்கியுள்ளது பிஎஸ்என்எல். நாடு முழுவதும் புதிதாக 75,000 4ஜி டவர்களையும் அமைத்து வருகிறது பிஎஸ்என்எல்.

தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் பிளான்களை விட பிஎஸ்என்எல் வழங்கும் திட்டங்கள் அதிக பலன்களை குறைந்த விலையில் வழங்குகின்றன. கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறினர்.
பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு விலைகளில், வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வரும் நிலையில், பல கோடிக்கணக்கான ரசிகர்கள் மொபைல் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சூப்பரான ரீசார்ஜ் திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் ரூ.251 என்ற விலையில் கவர்ச்சிகரமான பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.251 ப்ரீபெய்டு திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
இந்த பிளானில் மொத்தமாக 251 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது சராசரியாக வெறும் 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இது முழுமையான டேட்டா பேக் திட்டம். இதில் அன்லிமிடெட் கால்ஸ், எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் ஏதும் இல்லை. ஐபிஎல் சீசனை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த டேட்டா பேக் வந்துள்ளது.
தடையற்ற மொபைல் டேட்டாவை விரும்புவோர் இந்த ரீசார்ஜ் மூலம் பலன் அடைய முடியும். டேட்டாவை பற்றி கவலைப்படாமல் தடையின்றி ஐபிஎல் போட்டிகளை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த பிளான் வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications