சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா எதிரொலி: Work From Home என்றால் காத்திருக்கிறது பிஎஸ்என்எல்லின் அதிரடி ஆஃபர்

Google Oneindia Tamil News

சென்னை: வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பிறந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அங்கு படிப்படியாக குறைந்தது. இதையடுத்து அங்கிருந்து பரவிய கொரோனா மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

 BSNL offers one month broadband service free for one month for WFH

அன்டார்டிகா கண்டம் தவிர்த்து ஏனைய கண்டங்களில் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் முதல் இந்தியா வரை ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியது.

இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடக் கூடாது என்பதையே அரசு பிரதானமாக கூறி வருகிறது. இன்னும் தமிழகத்தில் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஐடி நிறுவனத்தினர் 4 அல்லது 5 பேராக சேர்ந்து இயற்கைச் சார்ந்த சூழலில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் இந்த வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்குவிக்க பல்வேறு நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

கொரோனா எதிரொலி.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஷிப்ட்.. வாரத்துக்கு 50% பேர் மட்டும் வந்தால் போதும்கொரோனா எதிரொலி.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஷிப்ட்.. வாரத்துக்கு 50% பேர் மட்டும் வந்தால் போதும்

அந்த வகையில் வீட்டிலிருந்து பணியாற்றும் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கான பிராட்பேண்ட சேவை இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளதாக அந்த பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநரான விவேக் பன்சால் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக பிராட்பேண்ட் இணைப்பை பெற விரும்புவோர் தொலைபேசி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

English summary
BSNL offers one month broadband service free for one month to encourage Work From Home employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X