விஜய் கொடிக்கு எதிர்ப்பு? யானை சின்னத்தை நீக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சி புகார்?
சென்னை: நடிகர் விஜய் இன்று அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை; ஆகையால் விஜய் கட்சியில் யானை சின்னம் இடம் பெறக் கூடாது; நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் தாம் அரசியலுக்கு வருவதாகவும் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியைத் தொடங்குவதாகவும் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்றுதான் இருக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கட்சியின் பெயரில் திருத்தம் செய்யப்பட்டது.

அத்துடன் ஆங்கிலத்தில் TVK என நடிகர் விஜய் கட்சி அழைக்கப்படுகிறது; ஆனால் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி TVK என அடையாளப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இதனால் ஆங்கிலத்தில் விஜய் கட்சியை TVK என அழைக்கவும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தமது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த கொடியில் 2 யானைகள், வாகை மலர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. விஜய் கட்சிக் கொடியின் யானைகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், மீம்ஸ்கள் வலம் வருகின்றன. ஃபெவிக்கால் விளம்பரத்தை திருப்பி போட்டுள்ளனரா? கேரளா மாநில அரசின் லோகோவை காப்பியடித்துள்ளாரா? ஸ்பெயின் நாட்டு தேசியக் கொடியில் மாற்றம் செய்துள்ளாரா? என ஏகப்பட்ட விமர்சனங்களும் மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் குவிந்து கிடக்கின்றன.
தற்போது விஜய் கட்சி கொடியின் நடுவில் இடம் பெற்றுள்ள யானைக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளில் ஒன்று பகுஜன் சமாஜ் கட்சி. இதன் தேர்தல் சின்னம் யானை. ஆகையால் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை விஜய் தமது கட்சிக் கொடியில் பயன்படுத்த முடியாது. இருப்பினும் விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!












Click it and Unblock the Notifications