Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை - பெங்களூர், சென்னை - ஹைதராபாத்.. வருகிறது அதிவேக ரயில் பாதை.. நிர்மலா செம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை பெங்களூர் இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் மற்றும் சென்னை ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டு உள்ளார்.

மத்திய பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாடிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது . புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி துறை பலமடங்கு வளர்ச்சி. கர்த்தவ்ய பவனில் தயாரித்த முதல் பட்ஜெட் இதுவாகும்

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றிகள். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். பல்வேறு நோய்களுக்கன மருந்தகள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது.

தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும். இதற்காக ரூ.10,000 கோடியில் பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உள்கட்டமைப்பு எந்திரங்களின் உற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் என்ற பெயரில் 4 மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Budget 2026 Announces High-Speed Rail Corridors Connecting Chennai to Bengaluru and Hyderabad

அது என்ன அதிவேக ரயில் சிஸ்டம்?

RRTS என்றால் என்ன? (Regional Rapid Transit System)

இது மெட்ரோ ரயில் (Metro Rail) மற்றும் சாதாரண ரயில்களுக்கு இடைப்பட்ட ஒரு நவீன போக்குவரத்து முறையாகும்.

வேகம்: மணிக்கு 160 முதல் 180 கி.மீ வேகத்தில் செல்லும். (மெட்ரோ ரயிலின் சராசரி வேகம் 35 கி.மீ தான்).

தூரம்: இது சுமார் 100 கி.மீ முதல் 200 கி.மீ தூரம் வரை உள்ள அண்டை நகரங்களை அதிவேகமாக இணைக்க உதவும்.

Frequency: ஒவ்வொரு 5 முதல் 10 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும்.

நமோ பாரத் (Namo Bharat): இந்தியாவில் இயக்கப்படும் RRTS ரயில்களுக்கு 'நமோ பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

RRTS வழங்கும் பிரத்யேக சேவைகள்:

நேரடி இணைப்பு: ஒரு நகரத்தின் மையப்பகுதியிலிருந்து மற்றொரு நகரத்தின் முக்கியப் பகுதிக்கு மிகக் குறைந்த நேரத்தில் செல்லலாம். உதாரணமாக, டெல்லி-மீரட் இடையே தற்போது 55 கி.மீ தூரம் பயன்பாட்டில் உள்ளது.

மெட்ரோவுடன் ஒருங்கிணைப்பு: இந்த ரயில் நிலையங்கள் பெரும்பாலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் (Multi-modal Integration). இதனால் பயணிகள் எளிதாக மாறிக் கொள்ளலாம்.

சொகுசு வசதிகள்: ரயில்களில் வைஃபை (Wi-Fi), லக்கேஜ் ரேக்குகள், மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் போன்ற நவீன வசதிகள் இருக்கும்.

நெரிசல் குறைப்பு: சாலைகளில் செல்லும் கார்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து, காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+