தாம்பரம் அருகே 10 வருடமாக விற்காத வீட்டுமனைகள்.. மாற்றி யோசித்த பில்டர்.. அடுத்து ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் செங்கல்பட்டு தாம்பரம் இடையே ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் கூடுவாஞ்சேரி வரை நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டன. அதன்பிறகு உள்ள காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்க பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு வரை ரியல் எஸ்டேட் வளர்ந்து வருகிறது. இதில் ஒரு பகுதியில் பல நாட்களாக வாங்குவதற்கு ஆளே இல்லாமல் ஒரு பகுதி கிடந்தது. ஆனால் அதனை வாங்கிய பில்டர் ஒருவர், மாற்றி யோசித்த காரணத்தால், இன்று நிலத்தை வாங்க மக்கள் போட்டி போடுகிறார்கள்.
சென்னை அருகே தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 வருடங்களில் இருந்ததை விட கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வந்த பின்னர் மாறிவிட்டது. அதேபோல் மெட்ரோ ரயில் நிலையமும் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் நிலத்தின் மதிப்பு முன்பை விட வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே செங்கல்பட்டு வரை மின்சார ரயில் இருப்பதால், அதுவும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகரிக்க காரணமாகி விட்டது.

சென்னையில் இடமே இல்லை
சென்னையை பொறுத்தவரை எங்குமே பிளாட் போட்டு விற்கும் அளவிற்கு இடமே கிடையாது.செங்கல்பட்டு மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தான் இடம் உள்ளது. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைவிட செங்கல்பட்டு மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அசுர வேகத்தில் இருக்கிறது.
ஏன் விரும்புகிறார்கள்
குறிப்பாக தாம்பரம் டூ செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் டூ திருப்போரூர், கேளம்பாக்கம் டூ கிளாம்பாக்கம், தாம்பரம் டூ ஒரகடம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக செல்வது என்றால், தாம்பரம் டூ செங்கல்பட்டு தான் மக்களின் தேர்வாக உள்ளது. ஏனெனில் மின்சார ரயில், ஜிஎஸ்டி ரோடு ஆகியவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தாம்பரம் செங்கல்பட்டு
அதேநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பும் இந்த பகுதியில் வளர்ச்சி அதிகமாக இருந்தது என்றாலும், இப்போது தேவை அதிகமாகி உள்ளதால், பலரும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே தான் இடம் வாங்கி தனி வீடு கட்ட ஆர்வம் காட்டுகிறார்கள்.. ஏனெனில் இடம் வாங்கி தனி வீடு கட்டுவது என்பது கிட்டத்தட்ட லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவோருக்கு கூட எளிதானது கிடையாது. அந்த அளவிற்கு இடத்தின் மதிப்பு அதிகம். அடுக்குமாடியில் தான் குடியேறவே முடியும்.
எப்படி விரும்புகிறார்கள்
என்ன தான் தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையே மக்களின் ஆர்வம் அதிகம் என்றாலும், எல்லாரும் ஜிஎஸ்டி சாலையில் இருந்து அதிகபட்சம் 2 கிலோ மீட்டருக்குள்,அதுவும் ரயில் நிலையம் அருகில் தான் இடத்தை பார்க்கிறார்கள்.. அப்படிப்பட்ட இடங்களில் இடம் வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.அதேநேரம் கடந்த 2008ம் ஆண்டு போடப்பட்ட வீட்டு மனை ஒன்று கிட்டத்தட்ட 12 வருடங்களாக சரியாக விற்காமலேயே இருந்துள்ளது. அதனை சதுர அடி 1000 க்கு வாங்க யாருமே முன் வராத அளவுக்கு தான் ஒரு காலத்தில் இருந்தது. என்ன தான் கிளாம்பாக்கம் வந்தாலும் அங்கு மட்டும் மாறாமல் இருந்தது. ஏனெனில் சரியான பாதை இல்லாமல் இருந்தது. சுற்றி செல்லும் வகையில் இருந்தது. அந்த பாதையும் அடர்ந்த வனப்பகுதி பாதை போல், ஆள் நடமாட்டம் இல்லாத பாதையாகவே இருந்தது.
அகலமான சாலை வசதி
பொதுவாக வீடு கட்ட இடம் வாங்குவோர், வேகமாக வளரும் பகுதியில் வாங்கவே விரும்புவார்கள். அதேநேரம் அந்த பகுதியில் மெயின் ரோட்டில் இருந்து இடத்திற்கு செல்ல அகலமான சரியான சாலை வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. ஏனெனில் அகலமான சாலை வசதி இல்லாத பகுதியில் வாங்கினால் பின்னாளில் சென்று வருவதற்கு சிரமம் ஏற்படும். அதேபோல் தண்ணீர் தேங்குமா என்பதை கவனிக்கவேண்டும். அதேபோல் இடம் விற்பவர் குறித்து நன்கு விசாரித்துக் கொள்ள வேண்டும். இறுதியாக நில ஆவணங்கள் சரியாக இருந்தால் வாங்கலாம்
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications