பஸ் நடத்துநர்கள் செல்போன் பார்க்க.. முன் சீட்டிலிருந்து தூங்க கூடாது: போக்குவரத்து கழகம் அதிரடி
சென்னை: பேருந்துகளில் நடத்துனர்கள் செல்ஃபோன் பயன்படுத்தவும், முன் இருக்கைகளில் அமர்ந்து தூங்குவதற்கும் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது.

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை நடத்தினர்கள் தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அண்மையில் உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து பேருந்தை இயக்க வேண்டும். பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஓட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது.
நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை என பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ நடந்து கொள்ள கூடாது என போக்குவரத்துத்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்நிலையில், பேருந்துகளில் நடத்துனர்கள் செல்ஃபோன் பயன்படுத்தவும், முன் இருக்கைகளில் அமர்ந்து தூங்குவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது, உறங்குவதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்தப் புகாரின்பேரில் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பேருந்துகளில் செல்ஃபோன் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நடத்துனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளையும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், செல்போனில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பேருந்து பரிசோதனையில் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு நேர நீண்ட தூர வழித்தடங்களில் ஓட்டுனர்களுக்கு உறுதுணையாக நடத்துனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தின் இந்த அதிரடி உத்தரவால், பேருந்து நடத்துனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications