கலக்கல்! பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராகிறாரா கோவை பெண் டிரைவர் ஷர்மிளா?
சென்னை: கமல்ஹாசன் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியானது விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது 6 சீசன்கள் முடிந்த நிலையில் 7ஆவது சீசன் விரைவில் தொடங்கவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதால் இதற்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஏதாவது ஆட்டிட்யூட் காட்டினால் உடனே அவர்கள் குறித்து கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் புகார் அளிப்பர்.
அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் எந்த போட்டியாளர் மீது தவறு இருந்தாலும் அவர்களை தலையில் கொட்டாத குறையாக கமல் அறிவுரைகளை வழங்குவார். அதற்கு நேரில் பார்க்கும் நேயர்கள் கூட கைகளை தட்டி ஆர்ப்பரிப்பர்.

இந்த 7ஆவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதற்காக தனது சம்பளத்தை ரூ 130 கோடியாக உயர்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆடிஷன் நடந்து வருவதாக தெரிகிறது. அதில் 5 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் ரேகா நாயர், மாகபா ஆனந்த், உமா ரியாஸ்கான், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உமா ரியாஸ்கான் மகன் ஷாரீக் ஹுசைன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் ஒரு காட்சியில் நடித்ததற்காக சர்ச்சைக்குள்ளானார். அவரை பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ஒரு முறை திருவான்மியூர் கடற்கரையில் பயில்வானை கண்டதும் ரேகா நாயர் கடுமையாக சண்டையிட்டார். ஒரு கட்டத்தில் அடிக்க பாய்ந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா முதல் போட்டியாளராக களமிறக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பெண் ஓட்டுநர் மிகவும் பிரபலமாகிவிட்டார். இவரை வானதி, கனிமொழி உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் கமல்ஹாசனும் ஷர்மிளாவை நேரில் அழைத்து காரை பரிசளித்தார். மேலும் அவர் பலருக்கு வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக வந்து பல ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டும் என கூறியிருந்தார். ஷர்மிளா குறுகிய அளவில் பிரபலமான நிலையில் அவரது இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோயர்கள் இருக்கிறார்கள். மேலும் ஷர்மிளா யூடியூப் சேனலை தொடங்க போவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இவர் பிக்பாஸ் சீசன் 7 இல் கலந்து கொள்வார் என தெரிகிறது. மேலும் நேற்றைய தினம் ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் இதுகுறித்து பேசியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications