தீபாவளி: சென்னையிலிருந்து சொந்த ஊர் போக.. எந்த பஸ் ஸ்டாண்டில் பேருந்து ஏற வேண்டும்? அரசு புது லிஸ்ட்
சென்னை: தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் (09/11/2023 முதல்
பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1. மாதவரம் புதிய பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி. ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.
2. கே.கே. நகர் மா.போ.பேருந்து நிலையம்: ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
3. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)
அ) திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
ஆ) தாம்பரம் இரயில் நிலைய திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்,
4. பூவிருந்தவல்லிபேருந்து நிலையம்: பைபாஸ் வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம் சாலை பேருந்து நிறுத்தம் செய்யாறு. ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி மாநகரதிருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள். போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்)
5.புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர. இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை நிலையம், கோயம்பேடு அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை. தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி. புதுக்கோட்டை. திண்டுக்கல். விருதுநகர், திருப்பூர், ஈரோடு. ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும்
பெங்களூரு) இங்கிருந்து செல்லும்.
சிறப்பு பேருந்து: இந்த நிலையில்தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்.. எப்படி புக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
புக்கிங் மையங்கள்: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும்.

இல்லையென்றால் https://www.tnstc.in/home.html பக்கத்தில் புக் செய்ய முடியும். அதில் லாக் இன் செய்து அல்லது செய்யாமல் விவரங்களை கொடுக்கலாம். செல்ல வேண்டிய இடம் , புறப்படும் இடம், நாள் தேதி குறிப்பிட்டால் பேருந்துகள் காண்பிக்கப்படும். அதில் தேவையான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.
இந்த பேருந்துகளுக்கான புக்கிங் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே மக்கள் போதுமான அளவு டிக்கெட்டுகளை புக் செய்துவிட்டனர். கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இந்த பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல புக் செய்துள்ளனர் .
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications