கப்பலேறிய தொழிலதிபர் மானம்.. ஹோட்டல் ரூமில் ஃபேஷன் டிசைனர் தீபா.. தங்க நகைகளால் ஒரு நொடி ஆச்சரியம்
சென்னை: கர்நாடக மாநிலம் பெலகாவியில் தொழிலதிபர்களை குறிவைத்து ஹனி டிராப் முறையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனின் அதிரடி மோசடி அம்பலமாகியுள்ளது.. ஒரு இளம் பெண் இந்த அளவுக்கு கிரிமினலாக செயல்படுவாரா? என்று கர்நாடக போலீஸார் வியப்பில் உள்ளனர்.. என்ன நடந்தது?
பெலகாவி டவுன் பகுதியை சேர்ந்தவர் அந்த பிரபல தொழிலதிபர்.. அவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.. அந்த பெண் மிகவும் வசீகரமாக பேசியதுடன், தொழிலதிபரின் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் ஆசைகாட்டி, தனது காதல் வலையிலும் விழ வைத்துள்ளார்..

நாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, பெலகாவியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருமாறு அந்த பெண் தொழிலதிபரை அழைத்துள்ளார்..
தொழிலதிபரின் தங்க நகைகள்
அவருடைய பேச்சை நம்பி பல்வேறு கனவுகளுடன் தொழிலதிபரும் வந்தார்.. அந்தப் பெண்ணுடன் இணைந்து ஹோட்டலில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்துள்ளார்.. அங்கு சென்றதும் தொழிலதிபரை முதலில் குளித்துவிட்டு வருமாறு அந்த இளம்பெண் சொல்லி உள்ளார். உடனே தொழிலதிபரும் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த தங்க நகைகள், தன்னிடம் இருந்த ரொக்கப்பணத்தை அங்கிருந்த படுக்கையிலேயே வைத்துவிட்டு குளிக்க சென்றார்..
அந்த நேரம் பார்த்து, பாத்ரூமின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிய அந்தப் பெண், அங்கிருந்த நகை மற்றும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளார்..
குளித்துவிட்டு வந்த தொழிலதிபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.. உடனே அந்த இளம்பெண், தொழிலதிபருக்கு போன் செய்து, மிரட்ட தொடங்கியுள்ளார்.. அவரோடு சேர்ந்து மேலும் சிலரும் பணம் கேட்டு மிரட்டியதால், பொறுமையிழந்த தொழிலதிபர் பெலகாவியின் திலக்வாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்..
ஓட்டல் ரூமில் ஃபேஷன் டிசைனர்
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அதில் டிப்-டாப் உடையில் வந்த அந்தப் பெண் மட்டும் தனியாக வெளியேறுவது உறுதியானது..
போலீசாரின் தீவிர விசாரணையில் அந்தப் பெண் பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுராவைச் சேர்ந்த 33 வயதான தீபா அவடகி என்பது தெரியவந்தது.. அவர் ஒரு ஃபேஷன் டிசைனர் என்பதும் உறுதியானது.. பிறகு ஒரு போலீஸ்காரரை சாதாரண உடையில் தீபாவிடம் பேச வைத்து, அவரை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்தனர்.. அங்கு வந்த தீபாவை மறைந்திருந்த போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்..
தீபாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.. அப்போது பல உண்மைகளை போலீசாரிடம் சொன்னார் தீபா.. பெலகாவி மாவட்டம் ஹக்கேரியை சேர்ந்த சிவானந்த் என்பவரை தீபா காதலித்து வருகிறாராம்.. அவர்கள் இருவரும் இணைந்து ஒரு திட்டமிட்ட கூட்டாக இந்த மோசடியை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது..
தீபாவின் வாக்குமூலம்
காதலன் சிவானந்த், பணக்கார தொழிலதிபர்களின் தகவல்களை திரட்டி தீபாவிடம் தருவாராம்.. அதன் அடிப்படையில் தீபா தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு வலையில் வீழ்த்துவார்.. இப்படி பலரையும் மோசடி செய்தே, லட்சக்கணக்கில் இருவரும் கொள்ளையடித்துள்ளது உறுதியானது..
தற்போது கைதான தீபாவிடமிருந்து ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் உட்பட இரண்டு கார்கள், 11 மொபைல் ஃபோன்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.. ஆனால் காதலன் சிவானந்த் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை தனிப்படை அமைத்துத் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.. இந்த ஜோடி இன்னும் யார் யாரை எல்லாம் ஏமாற்றியுள்ளது என்ற லிஸ்ட்டை போலீசார் தயாரித்து வருகின்றனர்..!!












Click it and Unblock the Notifications