கப்பலில் யாரு புஸ்ஸி ஆனந்த்? போன் காலில் வெடித்து அழுத விஜய்.. மீண்டும் வருது வீடியோ! பிரபலம் நச்
சென்னை: விஜய் கரூருக்கு செல்வதால், அவருக்கு உரிய பாதுகாப்பு, வழிகாட்டுதல் வேண்டும் என்று தவெக தரப்பில் டிஜிபி ஆபீஸில் மனு தரப்பட்டுள்ளது. ஒருவேளை இதற்கு அனுமதி தரலாம் என்று முடிவு செய்யப்பட்டால், தவெகவுடன் போலீசாரும் பேசக்கூடும் என தெரிகிறது. எனினும் அதற்கு முன்பு விஜய் வீடியோ ஒன்றை வெளியிடலாம், அந்த வீடியோவில் பல்வேறு விரிவான தகவல்களை விஜய் பேசக்கூடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கணிப்பாக தெரிவித்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, கரூர் சம்பவம் மிகப்பெரிய கரும்புள்ளி என்பதில் மாற்றுக்கருத்தில்லை..

நாளைய தினம் 2 விதமான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.. இதில் ஒரு கேஸ், தவெக போட்ட கேஸாகும்.. எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு வின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை, அந்த விசாரணையும் தேவையில்லை, தங்களுக்கு சிபிஐதான் விசாரணை வேண்டும் என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.. இந்த மனுவின் விசாரணைதான் நாளை வருகிறது.
சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு
அதேபோல சிபிஐ விசாரணை தேவை என்று தவெகவுடன் சேர்ந்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கேட்டன, இது தொடர்பாக தவெக சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுவானது சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த மனுவும் நாளைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த இரு தீர்ப்பும் எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.
இதனிடையே விஜய் கரூருக்கு செல்வதால், அவருக்கு உரிய பாதுகாப்பு, வழிகாட்டுதல் வேண்டும் என்று தவெக தரப்பில் டிஜிபி ஆபீஸில் மனு தரப்பட்டுள்ளது. ஒருவேளை இதற்கு அனுமதி தரலாம் என்று முடிவு செய்யப்பட்டால், தவெகவுடன் போலீசாரும் பேசக்கூடும் என தெரிகிறது.
உடைந்து அழுத விஜய்
அப்படி கரூருக்கு விஜய் செல்வதானால், அவருக்கு அங்கே எப்படி பிரதிபலிப்பை தரும்? இதற்கு எதிர்ப்பு இருக்குமா? ஆதரவு இருக்குமா? என்று தெரியவில்லை.. ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் பேசும்போது, உடைந்து அழுதுள்ளார்..
"நான் அவ்வளவு சொல்லியும் குழந்தைகளை ஏன கூட்டிட்டு வந்தீங்க?" என்று கேட்டு கண்ணீர் விட்டுள்ளார்.. அப்போது பாதிக்கப்பட்டவர்கள், "நீங்க உடைந்து விடாமல் இருங்க" என்று தைரியம் சொல்லி உள்ளார்கள்.
தவெகவில் சிதறி ஓடிய இரண்டாம் கட்ட தலைவர்களில் ராஜ்மோகன் மட்டும் இப்போது வெளியில் வந்து பேசியிருக்கிறார்..
இதற்கு காரணம், ராஜ்மோகன் பாஜக பக்கம் போக போவதாகவும், அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகவும் செய்திகள் பரவியதால்தான், மீடியா முன்பு ராஜ்மோகன் பேட்டியை தந்து, விளக்கமும் தந்துள்ளார்.
நடுக்கடலில் புஸ்ஸி
ஆனால், மற்றவர்களை காணவில்லை.. புஸ்ஸி ஆனந்தை தேடி கொண்டேயிருக்கிறார்களாம். ஏற்காடு, சேலம், வீரப்பன் காட்டில் இருப்பதாக சொன்னார்கள்.. இப்போது வங்க கடலில் படகில் பயணம் செய்து கொண்டவாறே உள்ளாராம்.. ஒருவேளை அவரை கைது செய்தாலும், அப்ரூவராக மாற வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்
காரணம், கரூரில் ஒவ்வொருவராக மயக்கமடைந்தபோது, வேனில் இருந்தது புஸ்ஸி ஆனந்த்தான் என்பதால், அவரிடம் விசாரணை நடத்தி அப்ரூவராக அவரை மாற்ற முயற்சிப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளது,
இதற்கு நடுவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்கள் வேலை.. பிள்ளையார் சுழி போட்டாச்சு, அங்கே கொடி பறக்குது பாருங்க என்று தவெக கொடியை காட்டுகிறார்.
பாஜகவுடன் கூட்டணி
ஆனால், இது சாத்தியமா தெரியவில்லை.. அரசியல் எதிரி, கொள்கை எதிரி என்பதில் விஜய் உறுதியாக இருப்பதால், எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று ஒருசாரார் சொல்கிறார்கள்.
எனினும் அதிமுகவுடன் சேர்ந்தால் மட்டுமே பலத்தை காட்ட முடியும், தனித்து நின்றால் அது திமுகவுக்கு பலமாக மாறிவிடும் என்று சிலர் விஜய்யிடம் எடுத்து சொல்லி உள்ளார்களாம்.. இதனால் கொள்கை எதிரியைவிட, அரசியல் எதிரியே முக்கியம் என்ற நிலைப்பாட்டுக்கும் விஜய் வரலாம் என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிரி, கொள்கை எதிரி என்பதில் விஜய் உறுதியாக இருப்பதால், எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். எனினும் அதிமுகவுடன் சேர்ந்தால் மட்டுமே பலத்தை காட்ட முடியும், தனித்து நின்றால் அது திமுகவுக்கு பலமாக மாறிவிடும் என்கிறார்களாம்.. இதனால் கொள்கை எதிரியைவிட, அரசியல் எதிரியே முக்கியம் என்ற நிலைப்பாட்டுக்கும் விஜய் வரலாம் என்று சொல்கிறார்கள் என்கிறார் செய்யாறு பாலு.












Click it and Unblock the Notifications