விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இன்று பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் சொத்து விவரங்களை குறிப்பிட்டு இருந்த நிலையில், அதில் தவெக பொதுச்செயலாளரான புஸ்சி ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் மனைவி சங்கீதா, மகன், மகள், தாய், தந்தைக்கும் கடன் கொடுத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வரும் சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பு மனு 4 நாட்கள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதால் இன்று விஜய் முதல் நாளிலேயே பெரம்பூரில் வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

அப்போது வேட்புமனுவில் விஜய் தன் சொத்து விவரங்களை குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக அசையும் சொத்துக்கள் என்ன, அசையா சொத்துக்கள் என்ன போன்ற விவரங்களை குறிப்பிட்டிருந்தார். விஜய் தன் மீது எந்த வழக்குகளும் இல்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார். மொத்தமாக ரூ.520 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் வங்கிக் கணக்குகளில் ரூ.278 கோடி மற்றும் 110 சவரன் தங்க நகைகள், ரூ.1 கோடி மதிப்பிலான வைர நகைகள், ரூ. 404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ. 11.51 கோடிக்கு அசையா சொத்துகள் இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐந்து கார்களும் உள்ளன என்றும், கடன் எதுவும் இல்லை என்றும் விஜய் தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தவெக பொதுச்செயலாளராக உள்ள புஸ்சி ஆனந்த் என்னிடம் ரூ.3 கோடி கடன் வாங்கியிருப்பதாக விஜய் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி கடன் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் மகன் சஞ்சய்க்கு 8 லட்சம் மற்றும் மகள் திவ்யாவுக்கு ரூ.4 லட்சம் கடன் கொடுத்துள்ளதாகவும், தாய் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகருக்கு மொத்தம் ரூ.3.87 கோடி கடன் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கார் மற்றும் பைக்குகளை பொறுத்தவரை விஜய்யிடம் மிக விலை உயர்ந்த காராக ரூ.3 கோடி மதிப்புள்ள டொயோட்டோ லெக்சஸ் கார் உள்ளது. இதேபோன்று முக விலை குறைந்ததாக டிவிஎஸ் எக்ஸெல் இருசக்கர வாகனமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். ரூ.67 ஆயிரம் மதிப்பு கொண்ட இந்த எக்ஸெல் பைக்கை கடந்த ஆண்டு தான் விஜய் வாங்கினாராம்.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications