முடிவெட்டினால் தான் தேர்தலில் சீட்.. மரிய வில்சனுக்கு, புஸ்ஸி ஆனந்த் போட்ட உத்தரவு! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''நீ தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் முடியெல்லாம் கட் செய்து வர வேண்டும்'' என்று நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு, தவெக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் போட்ட உத்தரவு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றி அமைச்சர் புஸ்ஸி ஆனந்தே இன்று சட்டசபையில் கூறினார்.

bussy-anand-said-that-to-maria-wilson-you-get-a-party-ticket-would-be-granted-only-if-he-cut-his-hai

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. நீர்வளத்துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு பல்வேறு புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன.

சட்டசபை நிகழ்வின் கடையில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அப்போது அவர் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் பற்றி பேசினார். இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:

''பைனான்ஸ் மினிஸ்டர். அவர் (மரிய வில்சன்) என்னிடம் வரும்போது முடியெல்லாம் வைத்து கொண்டு வந்தார். ஆபிஸ் வந்தவுடன் அண்ணன் இப்படி எல்லாம் முடி வச்சிக்க கூடாதுனே.. நீ தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் முடியெல்லாம் கட் செய்து வர வேண்டும்ணேன் என்று கூறினேன். அதற்கு அவர் மேலும் கீழுமாக பார்த்துவிட்டு. சரி பர்ஸ்ட் அனுபவம் என்று போனார்.

ஒரு வாரம் கழித்து முடியெல்லாம் வெட்டிகரெக்ட்டா வந்தாரு. கண்டிப்பாக எம்எல்ஏ ஆகிடுவ அண்ணன் என்று சொன்னேன். நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி தான் போக வேண்டும் என்று எங்கள் கட்சியில் இருந்தோம். எங்களின் தலைவர் அப்படித்தான் வழிநடத்தினார். அவர்(மரிய வில்சன்) பைனான்ஸ் மினிஸ்டராக எப்படி பட்ஜெட் உரையை தாக்கல் செய்வார் என்ற பயம், பதற்றம் இருந்தது. உண்மையாகவே மிகச்சிறப்பாக, தெள்ளத்தெளிவாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்து விவசாயத்துறை அமைச்சர் (வினோத்). இவர் இளைஞர். இதனால் எப்படி பட்ஜெட் இருக்கும் என்ற பயம், பதற்றம் இருந்தது. அவரும் மிகச்சிறப்பாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தவெகவில் ஒரு சில பேர் தான் பழைய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்னங்கடா இவங்க சின்ன பசங்க.. எப்படி இருப்பாங்கனு கேட்கலாம். ஆனால் மக்கள் இப்போது பேசுகிற ஒரு விஷயம் உண்மையாகவே தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர், எம்எல்ஏக்கள் நன்றாக பேசுகிறார்கள் என்பது தான் அவர்களின் கருத்தாக இருக்கிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+