நாக்கில் எச்சில் ஊறுதே.. உலகின் 5வது பெஸ்ட் சிக்கன் உணவு பட்டர் சிக்கன்! இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு
சென்னை: உணவுப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பிரதான ஒன்றாக சிக்கன் இருக்கிறது. பல டைப் உணவாக சிக்கன் செய்யப்படும் நிலையில், அதை உணவுப் பிரியர்கள் ரசித்து ருசித்துச் சாப்பிடுவார்கள். இதற்கிடையே உலகிலேயே மிகவும் பிரபலமான சிக்கன் உணவுகள் என்ற லிஸ்ட்டை டேஸ்ட்அட்லஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பட்டர் சிக்கன் 5வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், மற்றொரு இந்திய உணவும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மாறுபடும். அதுபோலத் தான் உணவுகளும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இருப்பினும், அதே உணவு தான் இந்தியர்களை இணைக்கவும் செய்யும். ஹைதராபாத்தின் பிரியாணி, தமிழகத்தில் பில்டர் காபிக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

பட்டர் சிக்கன்
அப்படி உலகெங்கும் ரசிகர்கள் இருக்கும் இன்னொரு உணவு தான் பட்டர் சிக்கன். டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பட்டர் சிக்கன் உணவுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சாலையோரம் அமைந்திருக்கும் சிறிய தபா முதல் நட்சத்திர ஹோட்டல்களில் வரை எல்லா இடங்களிலும் பட்டர் சிக்கன் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் கூட ஆர்வமாகச் சாப்பிடும் உணவாகப் பட்டர் சிக்கன் இருக்கிறது.
மேலும் புதிய இடங்களுக்குச் செல்வோரும் பெரும்பாலும் பட்டர் சிக்கனை தான் ஆர்டர் செய்வார்கள். எல்லா இடங்களிலும் பட்டர் சிக்கன் நன்றாகவே இருக்கும். மினிமம் கியாரண்டி கிடைக்கும் என்பதால் பட்டர் சிக்கனை தான் ஆர்டர் செய்வார்கள். அதற்கேற்ப எப்போதும் பட்டர் சிக்கனும் டேஸ்டில் சொதப்பாது. அப்படிப்பட்ட பட்டர் சிக்கனுக்கு இப்போது மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
5வது இடம்
பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியான டேஸ்ட்அட்லஸ் (TasteAtlas) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறந்த உணவுகள் குறித்த பட்டியல்களை வெளியிடும். அதில் உலகின் சிறந்த 20 சிக்கன் உணவுகளில் பட்டியலில் இந்தியாவின் பட்டர் சிக்கனுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. இது பட்டர் சிக்கன் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டர் சிக்கன் மட்டுமின்றி இந்த லிஸ்டில் இன்னொரு இந்திய உணவுக்கும் இடம் கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
முதலிடம் யாருக்கு
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் துருக்கியின் பிலிக் டோப்காபி (Piliç Topkapi) உள்ளது. அரிசி, கீரை மற்றும் நட்ஸ்களை சிக்கனுக்குள் வைத்துச் செய்யப்படும் ஒரு வகை உணவாகும். மொராக்கோவின் ரிஃபிஸா (Rfissa) இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தையும், தென் கொரியாவின் பிரபலமான க்ரிஸ்பி ஃப்ரெய்ட் சிக்கன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
நான்காவது இடத்தில் பெரு நாட்டை சேர்ந்த போலோ எ லா பிராசா இருக்கிறது. அதைத் தொடர்ந்தே 5வது இடத்தில் பட்டர் சிக்கன் வருகிறது. லேசான மசாலா மற்றும் க்ரீமியான சுவையுடன் தயாரிக்கப்படும் பட்டர் சிக்கனுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இந்திய உணவாகப் பட்டர் சிக்கன் மாறியுள்ளது.
தந்தூரி சிக்கன்
இந்த லிஸ்டில் இன்னொரு இந்திய உணவுக்கும் இடம் கிடைத்துள்ளது. டேஸ்ட்அட்லஸ் பட்டியலில் தந்தூரி சிக்கன் 14வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே மிகவும் பழமையான சிக்கன் உணவுகளில் ஒன்றாக தந்தூரி சிக்கன் கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தே இந்த உணவுக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
இருப்பினும், இன்று நாம் சாப்பிடும் வகையில் தந்தூரி சிக்கன் 1940களின் பிற்பகுதியில் டெல்லியில் சமைக்கப்பட்டது. இந்த இரு உணவுகளும் தான் இப்போது டேஸ்ட் அட்லஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications