டிஆர்பி ராஜா எனும் நான்.. உதயநிதி, அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி! அமைச்சரவையை சூழும் இளைஞர் படை
சென்னை: திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜாவை தமிழ்நாட்டின் அமைச்சராக உள்ளார். இதன் மூலம் மேலும் ஒரு இளைஞர் தமிழ்நாடு அமைச்சரைவையில் இணைய இருக்கும் நிலையில், இளம் வயது அமைச்சர்கள் யார் என்ற பட்டியலை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதில் மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில்தான், இன்று இரவு ஆளுநரின் முதன்மை செயலாளரிடம் இருந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடி, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்கிறார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
"ராஜ் பவனில் உள்ள தர்பார் அரங்கில் 11 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை அமைச்சரவைப் பதவியில் இருந்து ஆளுநர் விடுவித்து உள்ளார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
டிஆர்பி ராஜாவின் வருகையின் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் டிஆர்பி ராஜா. திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் மகனான இவருக்கு 46 வயது ஆகிறது.
திமுக ஐடி விங் தலைவராக இருந்து வரும் டிஆர்பி ராஜா, அரசின் திட்டங்கள் சாதனைகளை கொண்டு செல்வது, எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது என சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். பொதுவாக 60 வயதுக்கு அதிகமானவர்களே அமைச்சராக முடியும் என்று எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் இளைஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
திமுக அரசு பதவியேற்கும்போது இடம்பெற்ற முதல் அமைச்சரவையில் இருந்தவர்களிலேயே இளம் வயது அமைச்சர் மதிவேந்தன்தான். தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அவருக்கு வெறும் 38 வயதே ஆகிறது. அதேபோல் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வயது 45 மட்டுமே. தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு 47 வயதே ஆகிறது.
இவர்களை கடந்த ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கும் 45 வயதுதான் ஆகிறது. தமிழ்நாடு அமைச்சரவையில் 50 வயதுக்கும் குறைவாக 4 அமைச்சர்கள் உள்ள நிலையில், இந்த வரிசையில் இணைந்து உள்ளார் 46 வயதான டிஆர்பி ராஜா.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications