உட்கட்சி தேர்தல்: தகுதியில்லாமல் போட்டியிட வந்த தொண்டர் விரட்டியடிப்பு: அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு
உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சி தலைமை அலுவலகத்திக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க வந்த அதிமுக தொண்டர் பிரசாத் சிங் என்பவர் தொண்டர்களால் அடித்து வெளியேற்றப்பட்டார்.
அதிமுக உட்கட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் அறிவிப்பில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளது என கே.சி.பழனிசாமி எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யவந்த அதிமுக தொண்டர் தாக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவு
அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப்பின் பல பிரச்சினைகளை சந்தித்தது. சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைக்குச் சென்றார். அதன் பின்னர் ஓபிஎஸ் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார். சசிகலா, டிடிவி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். கட்சி விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமைக்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படலாம் என விதி திருத்தப்பட்டது.

கட்சி விதிகளில் மாற்றம் வானளாவிய அதிகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்
நேற்று முன் தினம் நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் 20, 43, 45, ஆகியவை திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது, கட்சியின் பொதுச் செயலாளர் போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்து நேரடியாக கட்சித்தொண்டர்களால் ஒற்றை வாக்கில் தேர்வு என விதி திருத்தப்பட்டது.

உட்கட்சி தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில் கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டிச.7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டது.
கட்சி விதி 30-ன் படி அதிமுக உட்கட்சித்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என்கிற அடிப்படையில் டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்கிறது. என அறிவிப்பு வெளியானது.

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
இந்நிலையில் அதிமுக உட்கட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. வேட்புமனுதாக்கல் செய்ய ஒரு தொண்டரும் வரவில்லை. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டுபேர் கூட்டாக வரவேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பதவிகளுக்கும் கூட்டாக வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். அவர்களை கட்சி உறுப்பினர்கள் 10 பேர் முன் மொழிய வேண்டும்
தலைமையை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என்பதால் காலையிலிருந்து பலரும் எதிர்ப்பார்த்தும் யாரும் வரவில்லை. போட்டியிடுபவர்கள் 5 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியில் இருக்கவேண்டும், அவரை 5 பேர் முன்மொழிய வேண்டும், 5 பேர் வழி மொழிய வேண்டும். அவர்களும் 5 ஆண்டுகள் கட்சியில் இருப்பவர்களாக இருக்கவேண்டும் என்கிற விதி உள்ளது.

அலுவலகம் வந்த கட்சித்தொண்டர்
இந்நிலையில் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க ஓட்டேரி அதிமுக தொண்டர் பிரசாத் சிங் என்பவர் வந்தார். அவர் உள்ளேச்சென்று வேட்புமனுவை கேட்டுள்ளார். என்ன பதவிக்கு என்று கேட்டபோது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு என்று கூறியுள்ளார். அப்படியானால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யார் என்று கேட்டுள்ளனர். அது யாரும் இல்லை என்று கூறிய்தாக தெரிகிறது. அப்படியானால் மனு இல்லை என்று கூறியுள்ளனர்.

தாக்கப்பட்ட தொண்டர்
இதைத்தொடர்ந்து வெளியில் வந்த அவர் ஆவேசமாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க தயாரானார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டு தாக்கினர். பின்னர் அவர் வெளியேற்றப்பட்டார். கட்சியினர் சிலர் தலையிட்டு அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!











Click it and Unblock the Notifications