விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல்.. பறிபோகும் விஜயதரணி பதவி.. திமுக ஜெயிச்சதே இல்ல.. தொகுதி டேட்டா!
சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் வர உள்ளது. விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியுள்ளதால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோகிறது. இதனால் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொறடா, காங்கிரஸ் அகில இந்திய மகளிரணி அணி பொறுப்பு உள்ளிட்ட பதவிகளில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

விஜயதரணி எம்.எல்.ஏ பதவி காலி: வரும் லோக்சபா தேர்தலில் சீட் கேட்டு டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பேசியதாகவும், ஆனால், விஜயதரணிக்கு சீட் கொடுக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்றும், அவர் தற்போது எம்.எல்.ஏவாக இருப்பதால் எம்.பி சீட் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியில் இருந்து வந்த விஜயதரணி, பாஜக மேலிடத்தில் பேசி, இன்று எல்.முருகன் தலைமையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
விஜயதரணி கட்சி மாறியதன் காரணமாக, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை பாயும். அதன்படி, அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழப்பார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விஜயதரணி இணைந்த நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்: விஜயதரணி கட்சி தாவியுள்ள நிலையில், அவர் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியை அவர் இழப்பார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கட்சி தாவலால் விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலையில், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி காலியாகும். இதையடுத்து, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி அங்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் வருமா?: லோக்சபா தேர்தல் தேதி வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால், அதற்குள் பதவி காலி அறிவிப்பு தமிழக சபாநாயகரால் பரிந்துரை செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டால், விளவங்கோடு இடைத்தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் இணைந்து நடத்தப்படலாம்.
இல்லையென்றால், லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு, சில மாதங்களுக்குள் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறலாம். 2021 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில், இரண்டாவதாக விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
விளவங்கோடு இதுவரை: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் விஜயதரணி தான் கடைசி 3 முறையும் வென்றுள்ளார். அவர் பாஜகவில் இணைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு சிறிய சறுக்கல் தான். எனினும், இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வலுவான அடித்தளத்தைக் கொண்டது. 1957 முதல் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி பலமுறை வென்றுள்ளது.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் மட்டுமே வென்றுள்ளன. திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்றதே இல்லை என்ற நிலை உள்ளது. விரைவில் வர இருக்கும் இடைத்தேர்தலில் இந்த நிலை தொடருமா, மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications