C Joseph Vijay: 'சி.ஜோசப் விஜய் எனும் நான்’ நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு! இப்படி தான் நடக்கும்.. ரூல்ஸ் இதுதான்
சென்னை: முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நேற்று இரவு முதலே சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கின. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்வராக விஜய் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்க இருப்பதையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் கொண்டாட்டம் களை கட்டியது. பெரும்பான்மை கிடைத்ததுமே கொண்டாட்டங்கள் தொடங்கின. பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குறிப்பாக பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

முதல் முறையாக தொண்டர்களுக்காக பனையூர் அலுவலக கதவு திறந்து விடப்பட்டது. கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த தொண்டர்கள் மகிழ்ச்சி பொங்க, கோஷங்கள் எழுப்பியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் அர்லேகர் விஜய்யை தமிழக முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்து கடிதம் வழங்கிய நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் தொடங்கி நடந்து வருகின்றன.
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நேற்று இரவு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கின. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்வராக விஜய் பதவி ஏற்றுக்கொள்கிறார். அப்போது அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்..
இதற்காக ஆளுநர், 'ஐ' (நான்) என்று ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணத்தை தொடங்கி வைத்ததும், விஜய் தமிழில், 'சி.ஜோசப் விஜய் ஆகிய நான்...' என்று உறுதிமொழியை வாசிப்பார். அதுபோல ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் தொடங்கி வைக்க, விஜய் அதை தொடர்ந்து படிப்பார். விஜய் வாயில் இருந்து ஒலிக்கப்போகும் இந்த வார்த்தைக்காக விஜய் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் நீண்ட நாளாக காத்திருந்தனர்.
அவர்களது கனவு இன்று நிறைவேறப்போகிறது. விஜய்யை தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை வாசிப்பார்கள். முன்னதாக தலைமைச் செயலாளர் சாய்குமார், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி அழைப்பு விடுப்பார்.
அதை தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் விருந்தினர் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படும். பின்னர் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து நேராக தலைமைச் செயலகம் செல்வார்கள். அங்கு முதல்வர் அறையில் உள்ள இருக்கையில் விஜய்யை மூத்த அமைச்சர்கள் அமர வைப்பார்கள்.
-
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
காங்கிரஸை டம்மி ஆக்குதா தவெக? ஒரே நாளில் சொதப்பிய விஜய்யின் டெல்லி பயணம்! அப்ப பாஜக லேசில் விடாதே -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ











Click it and Unblock the Notifications