தமிழை சுவாசித்த பேரறிஞர் அண்ணா..! இபிஎஸ், ஓபிஎஸ் நெகிழ்ச்சி பதிவு
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னை: திமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில் தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 3, 2021
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன். pic.twitter.com/mfk2zG40gr
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பதிவில், தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! என்று பதிவிட்டுள்ளார்.
தமிழை சுவாசித்தவர்;
— O Panneerselvam (@OfficeOfOPS) February 3, 2021
தமிழர்களை நேசித்தவர்;
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்;
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்!
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன். #அண்ணா pic.twitter.com/JZySjAWWG1
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications