C.V.S: "எங்க சாப்பாடு போடுறாங்களோ அங்க போறேன்!" சி.வி.சண்முகம் கலகலப்பு பேச்சு! கடுகடுப்பு போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்க சாப்பாடு போடுறாங்களோ அங்க போறேன் என சட்டசபை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலகலப்பாக தெரிவித்தார். எப்போதும் முகத்தை சிடு சிடு என வைத்துக் கொள்ளும் அவர் இன்று சிரித்த பேசியதால் அவரை சுற்றி இருந்தவர்களும் சிரித்துவிட்டனர்.

தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பல்வேறு விஷயங்கள் காரசாரமாக இருந்தன. அதிலும் நிறைய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

cv shanmugam

இந்த நிலையில் பட்ஜெட்டின் போது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் மற்ற அதிமுக எம்எல்ஏக்களிடம் அதிகம் பேசவில்லை என சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்ததுமே மேற்கண்ட மூவரும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து பேசினர்.

இதனால் அவர்கள் மூவரும் அதிமுக எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த போகிறார்கள் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து சிவி.சண்முகத்திடம் கேட்ட போது தொகுதியில் உள்ள நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்றிருந்தோம் என்றார். அது போல் எஸ்பி வேலுமணியும், நாங்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள், எதற்காக தவெகவில் இணைய வேண்டும், நான் தவெகவில் இணைவதாக கதை கட்டி விடுகிறார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கூட அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபை தலைவரும் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தவெகவுக்கும் திமுகவுக்கும் பதிலடி கொடுத்த போது கூட சி.வி.சண்முகம் முகத்தை கடுகடுவென்றே வைத்திருந்தார்.

அது போல் எஸ்.பி.வேலுமமி பேசுகையில் கூட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட சொல்லாமல் பேசினார். இந்த நிலையில் சட்டசபை உணவு இடைவேளையை தாண்டி நீண்ட நேரம் நடந்தது. ஏராளமான உறுப்பினர்கள் பேசியிருந்தனர்.

இந்த நிலையில் அவை நடந்து கொண்டிருந்த போதே சி.வி.சண்முகம் அவரது ஆதரவாளர்களுடன் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்கள் "சார் எங்க போறீங்க" என கேட்டனர்.

அதற்கு சி.வி.சண்முகம், "எங்கே சாப்பாடு போடுறாங்களோ அங்க போறேன்.. என சொல்லிவிட்டு சிரித்த அவர் மணி 2.15 ஆகிறது. சாப்பிட போகிறேன் என்றார். அப்போது அவர் மேலும் பேசுகையில் அதிமுக, திமுக ஆட்சிகள் ஒவ்வொரு முறையும் கடந்த ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை தொடர மாட்டார்கள். ஆனால் தவெக அரசு அப்படியே தொடர்வது பாராட்டுக்குரிய விஷயம் என்றார்.

பொதுவாக பிரஸ் மீட் என்றாலே சி.வி.சண்முகம் முகம் கடுகடுவென இருக்கும். ஆனால் இன்று அவர் சிரித்த முகத்துடன் பேட்டி அளித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+