"சிஏஏவுக்கு எதிராக தீர்மானமா".. செம டென்ஷனில் அமித்ஷா.. சிக்கலில் அதிமுக.. என்ன நடக்குமோ!
சட்டசபையில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் இயற்ற யோசித்து வருவதாக தெரிகிறது
சென்னை: "என்னது.. தீர்மானம் போடப்போறீங்களா" என்று அதிமுகவிடம் ஏகத்துக்கும் டென்ஷன் ஆகி கொந்தளித்திருக்கிறார் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா.. இதன் வெளிப்பாடுதான் முரளிதர் ராவ் அங்கிருந்து இங்கு வந்து முதல்வரை பார்த்ததும், தமிழக அமைச்சர்கள் இங்கிருந்து டெல்லி போனதும் என்கிறார்கள்!
Recommended Video
சிஏஏ இன்று சட்டமானதற்கு முக்கிய காரண கர்த்தாக்களில் ஒன்று அதிமுக.. பாஜகவுக்காக இதை அப்போது செய்திருந்தாலும் அதன் விளைவுகள் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதிமுக தரப்பு நினைத்துக் கூட பார்த்திருக்காது.
பத்தோடு பதினொன்றாக இது போய் விடும் என்றுதான் நினைத்திருக்கும். ஆனால் இஸ்லாமியர்கள் மொத்தமாக அதிமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

போராட்டங்கள்
15 நாட்களுக்கு முன்பு இருந்த எடப்பாடியார் மனநிலைமை இப்போது இல்லை.. டெல்லி வன்முறையாகட்டும், வண்ணாரப்பேட்டை போராட்டமாகட்டும், 42 பேருக்கும் மேலாக காவு வாங்கின அராஜகம் ஆகட்டும், இந்த அளவுக்கு நாடே பொங்கிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.. இன்னும் சொல்ல போனால் எதிர்க்கட்சிகள் எல்லோருமே இந்த ஒரு காரணத்தை காட்டி அதிமுகவை டேமேஜ் செய்வார்கள் என்பதும் எதிர்பாராத ஒன்றுதான்.

போராட்டகுழு
அதனால்தான் தன் நிலைப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக முதல்வர் மாற்றி கொண்டு வருகிறார்.. சிஏஏ, என்ஆர்சி, உள்ளிட்டவற்றின் அர்த்தங்களையும், அதன் ஆழங்களையும் புரிந்து கொண்டுள்ளார்.. வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் நேரில் சந்தித்து பேசியதுமே அவரது நிலைப்பாடு மேலும் தளர தொடங்கிவிட்டது.

தீர்மானம்
முஸ்லிம்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம் என்று முதல்வர் உறுதியாக சொன்னாலும், தீர்மானத்தை நிறைவேற்றும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தெரிவிக்கவும்தான் வேறு வழியில்லாமல், சட்டமன்றத்தில் சிஏஏ க்கு எதிரான தீர்மானத்தை இயற்றுவது குறித்து யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அமித்ஷா
ஆனால் அப்படி தீர்மானம் நிறைவேற்றலாமா என்ற தயக்கமும் அதிமுகவிடம் உள்ளது. காரணம் பாஜக. இதை பற்றி அமித்ஷாவிடமும் விஷயத்தை சொல்லி புரிய வைக்கவும், தங்கள் முடிவை தெரிவிக்கவும் அதிமுக தலைமை விரும்பியது.. இது சம்பந்தமான முயற்சி எடுத்தபோதுதான், மார்ச் 2ம் தேதி சாயங்காலம் சந்திக்க வருமாறு அமித்ஷாவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது.. பிறகுதான் தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கு பறந்தனர்.

சட்டம் - ஒழுங்கு
சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுவது குறித்தும், தீர்மானம் நிறைவேற்று யோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.. ஆனால் அமித்ஷா டென்ஷனாகிவிட்டாராம்.. தீர்மானம் நிறைவேற்ற போறீங்களா? அதெல்லாம் முடியாது.. இன்னைக்கு நீங்க கேட்டால் நாளைக்கு இன்னொருத்தர் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க... உங்க மாநில சட்டம் ஒழுங்கை முதல்ல கட்டுப்படுத்துங்க... பிரதமரே என்ஆர்சி கொண்டு வரபோகும் திட்டம் எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாரே, அதையா எதிர்த்து தீர்மானம் போட போறீங்க? என்று ஆவேசமானாராம்..

எதிர்க்கட்சிகள்
ஆனால் தமிழக அமைச்சர்கள் இங்குள்ள நிலைமையை எடுத்து சொல்லி உள்ளனர்.. தமிழக மக்களின் மனநிலைமையை புரிய வைத்துள்ளனர்.. தீர்மானம் போட்டால்தான் போராட்டத்தை கைவிடுவதாக சொல்கிறார்கள், எதிர்க்கட்சிகளும் இதை பெரிய குறையாக விமர்சித்து வருகின்றனர் என்று அனைத்தையும் தெளிவாக கூறியுள்ளனர். இதற்கு பிறகுதான், தீர்மானம்தானே போடப்போறீங்க.. சரி.. என்ற ரேஞ்சுக்கு ஓரளவு அரைகுறை சம்மதத்தை அமித்ஷா சொன்னதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

முரளிதரராவ்
அங்கு அமித்ஷாவை அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள் என்றால், இங்கே முதல்வரை தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவும் சந்தித்து பேசியுள்ளார்.. கிட்டத்தட்ட அமித்ஷா பேசியதைதான் இவரும் பேசியுள்ளார். தீர்மானம் எதுவும் போட வேண்டாம் என்ற கருத்தையே தெரிவித்துள்ளார்... இதனால் முதல்வர் எடப்பாடி யோசனையில் உள்ளாராம்.. தீர்மானம் போட்டால் பாஜகவை மொத்தமாக பகைத்து கொள்வது போலாகிவிடும், அதன்பிறகு தலைவலிதான் என்று அதிமுக தலைமை யோசிக்கிறதாம்.

திமுக
அதேசமயம், இப்போதைக்கு திமுகவை ஆஃப் செய்ய வேண்டும்... அவ்வளவுதான்.. மேலும் சிறுபான்மையினர் சமுதாய மக்களின் அதிருப்தியில் இருந்து மீளவும் வேண்டும்.. அதனால் மானியக் கோரிக்கை விவாதக் கூட்டத்தொடரின்போது பாஜகவுக்கும் பழுது இல்லாமல், இஸ்லாமியர்களையும் கூல் செய்யும் வகையிலான கலந்து கட்டிய தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications