Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படும் பிரச்சார வாகனத்தின் கணக்கில் முறைகேடு செய்ததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் பதவியே பறிபோகும் நிலை ஏற்பட்டது. அதிமுகவில் அதிகாரம் மிக்க நபராக இருந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தபோது 'ஜானகி' அணியில் இருந்தவர்.

சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதி அவரால் புகழ்பெற்றது. அத்தொகுதியில் 1989 அதிமுக (ஜா) அணி சார்பில் நின்று வெற்றி பெற்றார். முன்னதாக 19977 முதல் 84 வரை இத்தொகுதியில் இவரது கொடியே பறந்தது. ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக ஒன்றானபோது பி.ஹெச். பாண்டியன் அதிகாரம் மிக்க அரசியல்வாதியாகக் கருதப்பட்டார். அதிமுகவில் 'முரட்டு' தோற்றம் கொண்டவர்கள் மிகச் சிலரே இருந்தனர். ஜெயலலிதா என்ற ஆளுமைக்கு முன் பலரும் தங்களை அடக்கியே வாசிப்பது வழக்கம். அதை மீறி வெளியே தெரிந்தவர் பாண்டியன்.

Campaign Vehicle Irregularity MLA Post Lost The Case Filed by PH Pandian in 1991

யார் இந்த பி.ஹெச்.பாண்டியன்?

அப்படிப்பட்ட பி.ஹெ.பாண்டியன் 1991 ஆம் ஆண்டு சேரன்மகாதேவி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஆர். புதுநைனார் ஆதித்தனை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. தன் செல்வாக்கு மிக்கதொகுதி கைவிட்டுச் சென்ற கோபத்தில் இருந்தார் பாண்டியன். இத்தேர்தலில் சுயேச்சையான நின்ற அவருக்கு யானை சின்னம் வழங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அங்கிகாரம் கிடைத்த பின்னரே யானை சின்னம் அக்கட்சிக்குச் சென்றது. அதற்கு முன்னதாக அது சுயேச்சை சின்னமாக இடம்பெற்றிருந்தது. பின் பாமகவுக்கு யானை சின்னம் வழங்கப்பட்டு வந்தது.

விஷயம் சின்னம் சார்ந்தது அல்ல. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதித்தனைப் பதவியை விட்டு அகற்றப் பல வழிகளில் முயன்றார் பாண்டியன். ஆதித்தன் 59,358 வாக்குகள் பெற்றி வெற்றியை உறுதி செய்தார். எதிர்த்து நின்ற பாண்டியனுக்கு 24,890 வாக்குகள் விழுந்தன. பி.ஹெச். பாண்டியன் தொகுதியில் புதுமுகமாக நின்ற ஆதித்தன் கைக்கு தொகுதி பறிபோய்விட்டது.

அதை உணர்ந்த பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார். அதாவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951இன் கீழ், ஒரு வேட்பாளர் தான் பயன்படுத்தும் பிரச்சார வாகனங்களின் செலவு கணக்கை முறையாகக் கணக்குக் காட்ட வேண்டும். அன்றாட செலவுகளை எழுதிவைக்க வேண்டும். அதற்கான ரசீதுகளை முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதித்தன் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அவர் தாக்கல் செய்த வாகன கணக்கில் தன் பிரச்சாரத்திற்கு TN 72: 1909 என்ற பதிவு எண் கொண்ட ஒரே ஒரு வானகத்தை மட்டுமே பயன்படுத்தியதாகக் கணக்கு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அதற்காக 15,877 ரூபாய் செலவு செய்ததாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் வேறு பதிவு எண் கொண்ட மற்றொரு வாகனத்தையும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் பாண்டியன்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஒரு வேட்பாளர் அந்தக் காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதி அளித்திருந்தது. ஆதித்தன் அதைவிடக் குறைவாகவே கணக்குக் காட்டினார். இருந்தும் மற்றொரு வாகனக் கணக்கை மறைத்திருந்தார். அதுவே குற்றச்சாட்டு.

அரசியல் களத்தில் பாண்டியன் வழக்கு நடத்துவதில் வல்லவர். அவர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் நீதிமன்றம் முறைகேட்டை உறுதிசெய்து, ஆதித்தன் பதவியைச் செல்லாது என 1994இல் அறிவித்தது.

இருந்தும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் ஆதித்தன். அங்கும் வழக்கு விசாரணையில் இவர் தரப்பில் குற்றம் நடந்துள்ளது என்றே உறுதியானது. Corrupt practice படி ஒரு வேட்பாளரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியும் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், ஆதித்தன் வெற்றி செல்லாது என்றது. அந்த அறிவிப்பு வருவதற்குள் அதிமுகவின் ஆட்சிக்காலம் 1991இல் இருந்து 1995 வரை நிறைவடைந்திருந்தது.

முப்பது ஆண்டுகளாகத் தனது கோட்டையாக இருந்த தொகுதி கைவிட்டுச் சென்றதால் பி.ஹெச்.பாண்டியனுக்கும் ஆதித்தனுக்குமான மோதலில் வெற்றி பெற்றார் பாண்டியன். அவர் தேர்தலில் தோல்வி பெற்றிருக்கலாம். சட்டப்படி அவர் ஆதித்தன் வெற்றியைச் செல்லாக்காசாக்கினார்.

ஜெயலலிதா 2 தொகுதிகளில் வெற்றி

இந்த 1991 தேர்தலில் ஜெயலலிதா பர்கூரில் நின்று வெற்றி பெற்றார். காங்கேயம் தொகுதியில் பெற்ற வெற்றிபெற்று, அதை ராஜினாமா செய்தார். பர்கூரில் 67,680 வாக்குகள் ஜெக்கு விழுந்தன. காங்கேயத்தில் 69,050 வாக்குகள் கிடைத்தன.

அதிமுக 164 தொகுதிகளைக் கைப்பற்றியது. காரணம், ராஜீவ்காந்தி படுகொலை. ஆகவே அதிமுக கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசியது. ராஜீவ் கொலையுண்டு கிடந்த காட்சியை போஸ்ட்ராக அடித்து மாநில முழுக்க ஒட்டியது. இந்தக் கொலைகாரர்களுக்காக உங்கள் வாக்கு என ஜெயலலிதா கர்ஜித்தார். அந்த அலையில் திமுக சுருண்டு விழுந்தது. 2 பேர் மட்டுமே வென்றனர். அதில் மு.கருணாநிதி ஒருவர்.

அடுத்த முறை 1996இல் நடைபெற்ற தேர்தலிலும் பி.ஹெச்.பாண்டியனுக்கு அதிமுகவில் சீட்டுக் கிடைக்கவில்லை. ஜெ.வுடன் மோதல் போக்கிலிருந்தார். வேலுதுரை அதிமுக வேட்பாளராக நின்று வென்றார். இந்த முறையும் பி.ஹெச்.பாண்டியன் சுயேச்சையாகக் களம் கண்டார்.

வழக்கமாக ஜெயலலிதா கடைப்பிடிக்கும் அதே பாணியைப் பாண்டியனிடமும் போட்டுப்பார்த்தார் ஜெ. அதாவது பாண்டியனுக்கு எதிராக அவரது மகன் மனோஜ் பாண்டியனை 2001இல் அதிமுக வேட்பாளராகக் களம் காண வைத்தார் ஜெ. மகனின் அரசியல் எழுச்சியால் பாண்டியனின் புகழ் மங்கத் தொடங்கியது. 2007இல் இத்தொகுதி மாற்றி அமைக்கப்பட்டதால் சேரன்மகாதேவி தொகுதி இப்போது தேர்தல் வரைபடத்திலிருந்து மறைந்துபோய்விட்டது.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+