காரணமே வேற.. அப்போ அது நடந்துடும் போலயே.. மீனவ கிராமங்களை வட்டமிட்ட திமுக, அதிமுக, பாஜக லீடர்ஸ்..ஓஹோ
சென்னை: பிரச்சாரங்கள் முடிவுக்கு வரும்சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் தீயாய் வாக்கு வேட்டையில் இறங்கிவருகிறார்கள்.. அதிலும் சென்னையின் கடலோர பகுதிகளில், பல்வேறு கட்சி கொடிகளின் நடமாட்டம் அதிகமாகவே தென்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்தவரை, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என 3 தொகுதிகள் உள்ளன.. இந்த 3 தொகுதிகளுமே, முக்கிய தலைவர்களின் போட்டியால், ஸ்டார் தொகுதியாகிவிட்டது. பல தரப்பு மக்களை உள்ளடக்கியதுதான் இந்த தமிழகத்தின் தலைநகரம்.. அதனால்தான், ஒவ்வொரு சமூக மக்களின் வாக்குகளையும் குறிவைத்து ஓட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது.

வடசென்னை: அந்தவகையில், மீனவர்களின் வாக்கு சதவீதமும் ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், வடசென்னை மற்றும் தென்சென்னையின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதும் பெரும்பாலும் மீனவ நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
வடசென்னையை பொறுத்தவரை, 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. ஆனால், இந்த பகுதியில் மட்டும் 43 மீனவர் கிராமங்கள் உள்ளன.. அப்படிப்பார்த்தால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்களில் ஒன்றரை லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்..
தென்சென்னை: தென்சென்னையை எடுத்துக்கொண்டால், நொச்சிக்குப்பம் முதல் பனையூர் வரை 50 மீனவ கிராமங்கள் உள்ளன... எனவே, இந்த தென்சென்னையில் மட்டும் 20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.. இவர்களில் இரண்டரை லட்சம் பேர் மீனவர்கள் ஆவர். எனவேதான், மீனவ நண்பர்களின் வாக்கு வங்கியையும் அரசியல் கட்சிகள் பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்காக மீனவ கிராமங்களிலும் கட்சி நிர்வாகிகள் குழுவாக தங்கி, ஆதரவு திரட்டி கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக, திமுக, பாஜக கட்சி வேட்பாளர்களின் மீனவ கிராமங்களிலும் வேகமெடுத்துள்ளது.. அதிமுகவின் ஜெயவர்தன், திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் இருவருமே மீனவர்களின் வாக்குகளை பெறுவதில் மும்முரமாகி உள்ளனர்.
யாருக்கு ஆதரவு: இவர்களுக்கு நடுவே, தன்னுடைய எளிமையான மற்றும் யதார்த்தமான பேச்சினால், மீனவ கிராம பெண்களின் பேராதரவை அசால்ட்டாக பெற்று வருகிறார் பாஜகவின் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
இந்நிலையில், நாம் ஒரு விஷயத்தை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.. மீனவர்கள் நலன்களை காக்கும் வகையில், விரைவில் மீனவர்களும் தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார்களாம்.. 2 மாதங்களுக்கு முன்பு, அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை கூறியிருந்தார்.
சென்னை: "சென்னையில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி கட்சி பெயர், சின்னத்தை அறிவிக்க உள்ளோம். தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு 12 சதவீதம் ஓட்டு வங்கி இருக்கிறது.. எப்படியும் வரப்போகும் சட்டசபை தேர்தலில், 50 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். 100 தொகுதிகளில், வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுப்போம்.. மீனவர்கள் கட்சி துவங்குவதற்கு காரணமான அதிமுக, திமுக கட்சிகளுக்கு நன்றி" என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், மீனவ பெருமக்களின் ஓட்டுக்கள் எந்த கட்சிக்கு கிடைக்க போகின்றன என்ற ஆர்வம் எகிறி வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications