சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ராமராஜன்".. ஆட்டத்தை கலைத்தாடும் மேலிடம்.. "நண்பரை" வைத்தே திமுகவுக்கு செக்?: ரவீந்திரன் துரைசாமி

ரஜினிகாந்த்தின் தமிழக அரசியலில் பங்கு எப்படி இருக்கும் என ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் எம்பி தேர்தலில், தமிழக அரசியலில் ரஜினிகாந்த் பங்கு வகிப்பாரா? பாஜக அவரை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்

சமீபத்தில், தமிழக ஆளுநர் ரவியை, ரஜினிகாந்த் சந்தித்து பேசியிருந்தார்.. இதையடுத்து, எப்படியும் ரஜினியை பாஜக முழுமையாகவே பயன்படுத்தி கொள்ளக்கூடும், அவரை இந்த முறை லேசில் நழுவ விடாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொன்னார்கள்..

காரணம், ரஜினியை, மோடி தரப்பில் அதிகமாகவே விரும்புகிறார்கள், ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து, சில பொதுக்கூட்டங்களில் பேச வைப்பது.. இதன்மூலம் இழந்துபோன ஆதரவை அறுவடை செய்து கொள்வது,.. இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பது.. என்பதே மேலிட தலைவர்களின் முடிவாக உள்ளதாக செய்திகள் வலம்வந்தன. அதேசமயம், கட்சி ரீதியாக ரஜினி பேச தயங்குவதால், கட்சி சாராத பொதுக்கூட்டங்கள் அல்லது விழாக்களை நடத்தி அதில் ரஜினியை பேச வைத்து பலனை தேடலாம் என்றும் ஒரு கணக்கு பாஜகவுக்கு உள்ளதாம்..

"நம்பர் 2".. பிரபல "உச்ச நடிகரை" நாடுகிறாரா எடப்பாடி.. ஒரே கல்லில் 2 மாங்காய்? யார் சொல்றது பாருங்க

 ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

அல்லது ஏதாவது ஒரு சிறிய மாநிலத்தின் ஆளுநராக அதன் மூலம் வாக்குகளை எளிதாக பிரிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், எம்பி தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது.. அதிமுக தரப்பில் எடப்பாடி பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், அவரை கழட்டிவிட்டு பாஜக, தேர்தலை சந்திக்க நேரிடலாம் என்றும் ஒரு கணிப்பு உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நம் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லி உள்ள கருத்துக்கள் இதுதான்:

 முருகன் 40

முருகன் 40

பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் எடப்பாடியிடம் உள்ளார்கள்.. அண்ணாமலை தற்போது பாஜகவுக்கான அரசியல் களத்தை உருவாக்குகிறார்.. கடந்த தேர்தலின்போது, முருகன் 40 சீட் கேட்டார்.. அப்பறம் 20 சீட்டுக்கே ஒப்புக் கொண்டு சென்றுவிட்டார்கள்.. அது எடப்பாடி பழனிசாமிக்கு சூழ்நிலையான களமாக அப்போது அமைந்துவிட்டது.. அதனால்தான் இன்னைக்கு கட்சியை, தட்டி எழுப்பி கொண்டு வரும் நிலையில் அண்ணாமலை இருக்கிறார்.. 40 சீட்டுக்களை அன்னைக்கே முருகன் கேட்டு வாங்கியிருந்தால், அது பாஜகவுக்கு பெரிய பலமாக இருந்திருக்கும்..

 அட்டாக் அமித்ஷா

அட்டாக் அமித்ஷா

இந்த முறை எடப்பாடியிடம் கூட்டணி பேசப்போனாலும், 20 சீட்டுக்குள்தான் வருவார்.. அதனால் அவருடன் கூட்டணி போவது வேஸ்ட்.. அதிமுகவில் தற்சமயம் உள்ள வெற்றிடத்தை எடப்பாடியோ, ஓபிஎஸ்ஸோ, நிரப்பாத பட்சத்தில்தான், திமுகவையும், அதிமுகவையும், சேர்த்தே அமித்ஷா அட்டாக் செய்ய சொல்லி இருக்கலாம்.. டேன் டீ தொழிலாளர்களுக்கு யாரும் நன்மை செய்யவில்லை என்று அண்ணாமலை பேசியதும் அதன்தாக்கமாக இருக்கும்.. 2024-ல் 10 சதவீதம் ஓட்டுக்களை அண்ணாமலை எடுத்துவிட்டால் அவர் சாதனையாளர்தான்.. ஏழரை சதவீதம் எடுத்தாலும் அண்ணாமலைக்கு வெற்றிதான்..

 50 % 50 %

50 % 50 %

எனினும் உண்மை நிலை களத்தில்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமியை தனித்துவ சக்தியாக இந்த நிமிடம்வரை மோடி, அமித்ஷா மதிக்கவில்லை.. ஓபிஎஸ் எடப்பாடியை 50-50 சதவீதமாகவே பார்க்கிறார்கள்.. அதிமுகவில் தற்போது விஜய்யை மதிக்கிறார்கள்.. எடப்பாடி + ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக உள்ள நிலையில், தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.. விஜய்யும், அரசியலில் தனக்கு நுழைவு புள்ளி இல்லாமல் தடுமாறுகிறார்.. அதனால் அண்ணாவுக்கு எம்ஜிஆர் மாதிரி, ஜெயலலிதாவுக்கு ராமராஜன் மாதிரி, எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் போன்ற சக்தி தேவைப்படலாம்.. பாஜகவுக்கு ரஜினி நம்பிக்கையாக இருக்கிறார்.. காரணம், தமிழக அரசியலில் ரஜினிக்கு இன்றைக்கும் ஒரு பார்வை உள்ளது..

லேங்குவேஜ்

லேங்குவேஜ்

ரஜினி என்றாலே இப்பவும் பிரதமர் அப்பாயிண்ட்மென்ட் தரக்கூடிய அளவுக்கு மதிப்பீடும் அவருக்கு உள்ளது.. மும்பை உட்பட பல்வேறு இடங்களில் மோடிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு உள்ளது.. "இந்த நாட்டுக்கு நிலையான தலைவர் வேண்டும், அது மோடியால் மட்டுமே முடியும்" என்பது போன்ற பிரச்சாரத்தை மும்பையில் ரஜினி பிரச்சார செய்ய வேண்டும், மராத்தியில் பேசலாம், ஹைதராபாத்தில் தெலுங்கில் பேசலாம், கர்நாடகத்தில் கன்னடத்தில் பேசலாம், அதேமாதிரி திருவனந்தபுரத்தில் மலையாளத்திலும், தமிழில் இங்கேயும் ரஜினி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கவே செய்கிறது..

 அப்பாயிண்ட்மென்ட்

அப்பாயிண்ட்மென்ட்

ஒருவேளை அது நிறைவேறலாம்.. ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல உறவு இருக்கிறது.. இருவரும் மிக நல்ல நண்பர்கள்.. கலைஞர் திறப்பு விழாவில், ஒரு உயரிய இடத்தை தந்து, ரஜினியை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து ரஜினியை கவுரப்படுத்தியதை கண்கூடாகவே நாம் பார்த்தோம்.. 2021-ல் முதல்வராக ஸ்டாலின் களத்துக்கு முதன்முதல்வரும்போது, ரஜினி நடுநிலைமையுடன் இருந்தார் என்பதையும் மறுக்க முடியாது..

 டீல் ஓக்கே

டீல் ஓக்கே

ஆளும்கட்சியாக இப்போது திமுக இருக்கும்போது, பாபா போன்ற படங்கள் இப்போது வெளியிடப்பட்டால், ஆளும்கட்சியை ரஜினி எதிர்ப்பதாக சொல்லி, வசூலுக்கு அந்த படம் அச்சாரமாக இருக்கலாம்... அதனால், திமுகவுக்கு எதிரான ஒரு போட்டியை ரஜினியை வைத்து வேண்டுமானால் பாஜக உருவாக்கலாமே தவிர, விஜய்க்கும் பாஜகவுக்கும் நல்லுறவு இருப்பது போல தெரியவில்லை.. ரஜினியை பிரதமரும் மதிக்கிறார், ஸ்டாலினும் மதிக்கிறார், இருந்தாலும், 2024 தேர்தலின்போது, நாட்டு நலனுக்காக மோடிக்காக தன் ஆதரவை ரஜினி பயன்படுத்துவார் என்று நம்புகிறேன்" என்றார்.

English summary
Can Actor Rajinikanth campaign against DMK and What are the BJP's plans: says Ravindiran Duraisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X