விஜய் அரசியல்.. பாஜகவை காலி பண்ணும் விஐபி? சீமானும் வர்றாரா? திராவிட கட்சிக்கே போட்டி? பலே
சென்னை: திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுக்கே ஆச்சரியத்தை தரக்கூடிய, கூட்டணி யுக்தி ஒன்று நடந்து கொண்டிருக்கிறதாம்.. அது என்ன?
விஜய்க்கான ஆதரவை தொடர்ந்து தந்து வருபவர் நாம் தமிழர் கட்சி சீமான். ஒருமுறை செய்தியாளர்கள் சீமானிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்டிருந்தார்கள்..

சீமான்: அதற்கு சீமான், "எம்ஜிஆரே கட்சி தொடங்க பயந்தார். திமுகவில் இருந்து விலகிவிட்டு என்ன செய்வதென்று அவருக்கு தெரியல.. அதுக்கப்பறம் சரி, நடத்திதான் பார்ப்போமே என்று கட்சி தொடங்கிவிட்டார். உடனே எம்ஜிஆரை பார்த்து என்டிஆர் ஆரம்பித்தார். ஆனால் சிரஞ்சீவி, பவன் ஆனால் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் அது முடியவில்லை.
ஆக, நின்று சண்டை செய்ய வேண்டும். தம்பி விஜய்யின் கனவு வெல்ல வாழ்த்துகிறேன். என் அன்பிற்குரிய தம்பி என்பதால் ஒரு அளவுக்கு மேல் என்னால் பேச முடியாது" என்றார் சீமான்.
பாஜக: அப்படியானால், பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை விஜய் எடுத்தால் நீங்கள் ஆதரவு தருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு சீமான், "தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. வரவேற்கிறேன். கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தானே? பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார்" என்று பதிலளித்திருந்தார் சீமான்.
சீமானின் இந்த பதில், அரசியல் களத்தில் அனைவராலுமே கூர்ந்து கவனிக்கப்பட்டது.. இப்போது விஷயம் என்னவென்றால், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றி கழகமும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று இணையத்தில் பறந்து கொண்டிருக்கிறது.
விஜய்: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.. ஆனால், களத்தில் நிற்பது பெரும்பாலும் இளைஞர்கள், அதிலும் புதியவர்களாக உள்ளனர்.. எனவே, அனுபவம் வாய்ந்த பலரையும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கு துணையாக சேர்த்து கொள்ளலாம் என்று விஜய் தரப்பில் யோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.
அந்தவகையில், சீமான் போன்ற சீனியர்களை தன்னுடன் வைத்து கொண்டால், கட்சிக்கு பலமாக இருக்கும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டு வருகிறதாம்..
8 சதவீதம்: அதுவும் இல்லாமல், சீமானிடம் ஏற்கனவே 8 சதவீத வாக்குகள் உள்ளன.. இதில் விஜய்யின் புதிய வாக்காளர்கள் இணையும்போது, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த மாற்றம் பாஜக, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்றும் கணக்கு போடுகிறார்களாம். அதாவது, சீமான் + விஜய் இருவருமே வலிமை நிறைந்தவர்கள் என்பதால், எப்படியும் 25 சதவிதத்துக்கு மேல் வாக்குகளை பெறமுடியும் என்று நினைக்கிறார்களாம்.
ஆனால், இதற்கெல்லாம் சீமான் ஒப்புக் கொள்வாரா என்று தெரியாது.. ஒவ்வொருமுறையும் தேர்தலின்போதும், சீமான் இந்த முறை கூட்டணி வைக்கக்கூடும் என்பார்கள்,.. ஆனால், கடைசி நேரத்தில் "சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்" என்று அறிவித்துவிட்டு போய்விடுவார் சீமான்.
மநீம கமல்: கடந்த 2019 தேர்தலின்போதும் இப்படித்தான் மக்கள் நீதி மய்யம் கமலுடன் இணைந்து சீமான் தேர்தலை சந்திப்பார் என்றெல்லாம் சலசலப்பு ஓடியது.. கமல் மீது சீமான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதால், எப்படியும் அவருடன் இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பம் தெரிவிப்பார் என்றெல்லாம் சொன்னார்கள்.. ஆனால் வழக்கம்போல், தனித்து போட்டி என்று அறிவித்தார் சீமான்.
எத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வினாலும், தனித்து போட்டி என்பதிலேயே இன்றுவரை சீமான் உறுதியாக இருப்பதை கவனிக்க முடிகிறது.. அப்படியிருக்கும்போது, விஜய்யுடன் இணைவாரா? என்று தெரிரியவில்லை..
பரபரப்பு: ஆனால், திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று விஜய் ஏற்கனவே தெரிவித்திருப்பதால், நிச்சயம் சீமானுடன் இணைவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இன்னும் லோக்சபா தேர்தல் முடிவு பரபரப்பே முடியாத நிலையில், அதற்குள் 2026 தேர்தல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டு எரிய துவங்கிவிட்டது... பொறுத்திருந்து பார்ப்போம்...!


Click it and Unblock the Notifications
