சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை த்ரிஷா? இங்கேயா?.. ஆச்சரியமா இருக்கே.. ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன இப்படி சொல்லிட்டாரே.. என்னாச்சு

டிகை த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து ஈவிகேஎஸ் கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகை த்ரிஷாவின் அரசியல் என்ட்ரி குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.. இதுகுறித்த எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    ப்ரியங்கா காந்தி Or ப.சிதம்பரம் | காங்கிரசின் அடுத்த தலைவர் யார் ?

    ஏற்கனவே காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார் நடிகை குஷ்பு.. உண்மையிலேயே குஷ்பு, காங்கிரஸ் கட்சிக்கு அந்த சமயத்தில் விசுவாசமாக இருந்ததாக கூறப்பட்டது.

    கடந்த கால காங்கிரஸ் அரசியலில், வேறு எந்த பெண் பிரமுகர்களும் குஷ்பு அளவுக்கு ஆக்டிவ்வாக இருந்தது கிடையாது..

    அதேசமயம், தொய்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் காங்கிரஸை பற்றி நிறையவே கவலைப்பட்டார் குஷ்பு.. அதிலும் ராகுல்காந்தியின் மெத்தனபோக்கை நினைத்து, பலமுறை வெளிப்படையாகவே விமர்சித்தார் குஷ்பு.. இதைவிட முக்கியமாக, கட்சியில் சேர்ந்து பல வருடங்கள் ஆனபோதிலும், தனக்கு வேறு முக்கிய பதவி எதுவும் தரப்படாதது குஷ்புவை அதிகம் கவலைக்கொள்ள செய்தது.

    இலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகைஇலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகை

    குஷ்பு

    குஷ்பு

    தேர்தலும் பலமுறை சீட் கேட்டும் அதையும் மேலிடம் தரவில்லை.. வெறும் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததால், கடுப்பான குஷ்பு, பாஜகவுக்கு தாவ நேர்ந்தது என்று காரணம் சொல்லப்பட்டது.. இப்போது குஷ்புக்கு பிறகு, அந்த இடம் காங்கிரஸில் காலியாகவே உள்ளது.. இந்நிலையில்தான், சமீபகாலமாகவே, த்ரிஷா தமிழக அரசியலுக்கு வரப்போவதாக ஒரு பேச்சு கிளம்பியது.. எப்படியும் பாஜக பக்கம்தான் அவர் வந்து இணைவார் என்று சொல்லப்பட்டது.

     கவர்ச்சி + அரசியல்

    கவர்ச்சி + அரசியல்

    காரணம், கவர்ச்சி அரசியலை பெரிதும் நம்பும் கட்சி பாஜகதான்.. வடமாநிலங்களை எடுத்துக் கொண்டால், டிக்டாக் பிரபலம் உட்பட அனைவருக்குமே தேர்தலில் சீட்டை தருவது பாஜகவின் வழக்கம்.. அதிலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் நடிகர், நடிகைகளின் பங்கு அதிக அளவு வெளிப்படும். எனவே, த்ரிஷா பாஜக பக்கம்தான் செல்ல வாய்ப்புள்ளது என்று முணுமுணுக்கப்பட்ட நிலையில், திடீரென காங்கிரஸ் பக்கம் அவர் வரப்போவதாக மற்றொரு செய்தி கிளம்பி உள்ளது. இது பலருக்கும் வியப்பை தந்து வருகிறது..

     ஈவிகேஎஸ் இளங்கோவன்

    ஈவிகேஎஸ் இளங்கோவன்

    ஒருவேளை த்ரிஷாவை பயன்படுத்தி, குஷ்புக்கு பதிலாக, இழந்த புத்துணர்ச்சியை மீட்டு கொண்டு வந்துவிடலாம் என்று கதர் கட்சி கணக்கு போடுவதாகவே கருதப்படுகிறது.. இந்த சமயத்தில்தான், அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு பிரபல நாளிதழுக்கு இதுதொடர்பாக பேட்டி தந்துள்ளார். அதில், "யார் யாரோ த்ரிஷா காங்கிரஸில் சேர போகிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் எங்கள் கட்சியில் அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை...

     த்ரிஷா பாலிட்டிக்ஸ்

    த்ரிஷா பாலிட்டிக்ஸ்

    இந்தத் தகவல் உண்மையா என்றும் தெரியாது. ஆனால், த்ரிஷா வருவதால் காங்கிரஸ் கட்சிக்கு பயனோ பலமோ உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் பெரிய தாக்கமும் ஏற்படாது. காங்கிரஸ் மதசார்பற்றக் கட்சி. அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கட்சி.. அதனால், மதசார்பின்மையையும் காங்கிரஸ் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு த்ரிஷா வந்தால் வரவேற்போம். இக்கொள்கைகளுடன் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்" என்று கூறியுள்ளார் இளங்கோவன்...

     நடிகை த்ரிஷா

    நடிகை த்ரிஷா

    இந்த பேட்டி குறித்து, த்ரிஷா ரசிகர்கள் அதிர்ந்துள்ளனர். த்ரிஷா வந்தால் வரவேற்போம் என்று கூறியுள்ள நிலையில், த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் பெரிய தாக்கமும் ஏற்படாது என்று கூறியிருப்பது, அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். மேலும், கட்சிக்கு வந்த நடிகைக்கு என்ன மரியாதை கிடைத்தது என்பதை திரிஷா சிந்தித்து பார்த்தால் நல்லது என்றும் வேண்டுகோள்களை விடுத்து வருகிறார்களாம்.

    English summary
    Can Actress Trisha's politics help Tamilnadu Congress grow and what did EVKS Elangovan says about it நடிகை த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து ஈவிகேஎஸ் கருத்து கூறியுள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X