Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இடிக்குதே".. கைமாறுதா அந்த ஓட்டுக்கள்.. எடப்பாடிக்கு பறந்துவந்த சிக்னல்.. திமுக உடனே சுதாரிக்கணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி கூட்டணி முடிவு ஏற்படுத்திய பரபரப்பைவிட, அதற்கு பிறகு அரசியல் களத்தில் நடக்கும் பரபரப்புகள் மக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.

அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக இல்லை என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததுமே, ஓடோடிவந்து வாழ்த்தை சொல்லி வரவேற்றது விசிகவின் திருமாவளவன்தான்..

Can ADMK Edapadi Palanisamy alliance with Asaduddin and whats TN BJP is going to do

பாஜக கூட்டணி: "பாஜக கூட்டணியை அதிமுக முறித்து கொண்டிருப்பது வரவேற்கதக்கதாகும். அதிமுக தனித்து போட்டியிட்டால் அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக இணைந்து பயணித்தால் அதன் வங்கி குறைந்துவிடும்'' என்று மீண்டும் கூறியிருந்தார் திருமாவளவன்.

இதுபோலவே, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு எண்ணம் இருப்பதாக தெரிகிறது.. கடந்த முறையே அதிமுகவுடன் கூட்டணி வைக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் முயன்றதாக ஒரு பேச்சு இருந்தது.. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகும்கூட, கூட்டணி தலைமையிடம் குறைகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டியும், ஆளும் அரசை எதிர்த்து கண்டன அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை விசிக போலவே சிபிஎம்மும் முன்னெடுத்து வருகிறது..

இண்டியா கூட்டணி: அதனால், இந்த முறை, பாஜக இல்லாத அதிமுகவுடன் கூட்டணி வைக்க, விசிக, கம்யூனிஸ்ட்கள் தயங்காது என்கிறார்கள்.. இந்த லிஸ்டில் காங்கிரசும் இணைந்துள்ளதாக சொல்கிறார்கள்.. திமுக கூட்டணியை விட்டுவிடக்கூடாது என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தாலும்கூட, மற்ற காங்கிரஸ் சீனியர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்களாம்.. 20 சீட் வரை காங்கிரசுக்கு ஒதுக்க அதிமுகவும் ஓகே சொன்னதாக தெரிகிறது..

எனவே, கூடுதல் சீட் பெறுவதுடன், ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்றும் இந்த கட்சிகள் கணக்கு போட்டு வருவதாக தெரிகிறது. இந்த லிஸ்ட்டில் சீமானும் என்ட்ரி ஆவார் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்ற பாலிசியை விட்டு, கூட்டணி என்ற விஷயத்தை சீமான் யோசிப்பாரா? என்பதே சந்தேகம்தான்.

2 நாட்களுக்கு முன்பு, பாஜகவுடன் கூட்டணியை முறித்ததுமே, ஜெயக்குமார் ஒரு வார்த்தை சொல்லியிருந்தார்.. திமுக கூட்டணியிலிருந்து சிலர் அதிமுகவுக்கு வரக்கூடும் என்றதை பலரும் கவனிக்காமல் இல்லை.

இப்போது விஷயம் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமிக்கு, ஓவைசி கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது வாழ்த்து தெரிவித்துள்ளார்.. மதவாத பாஜகவிலிருந்து வெளியே வந்ததற்கு நன்றியும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம்தான் பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.

ஓவைசி கட்சி: ஓவைசியை பொறுத்தவரை, நாடு முழுவதும் பரவலான செல்வாக்கை பெற்றவர்.. குறிப்பிடத்தகுந்த வாக்கு வங்கி இவருக்கு உள்ளது.. அதேசமயம் "பாஜகவின் B-டீம்" என்றே கருதப்பட்டு வருகிறார்..

பீகார் தேர்தல்: பீகாரில் மட்டுமல்ல, எந்த இடத்தில் காங்கிரஸ் நின்றாலும், அதன் வாக்குகளை பிரித்து, பாஜகவுக்கு மறைமுகமாக ஓவைசி கட்சி உதவுவதாக, நீண்ட காலமாகவே விமர்சனம் உள்ளது.. இப்படியிருக்கும்போது, திடீரென எடப்பாடிக்கு வாழ்த்து சொன்னதுமே, பலவித யூகங்கள் கிளம்பி விட்டன.

கூட்டணியிலிருந்து பிரிப்பது போல அதிமுகவை பிரித்துவிட்டு, ஓவைசி போன்றோரை வைத்து வாழ்த்து சொல்ல வைப்பதன் மூலம், இழந்துபோன சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுக பெற்றுவிடும் என்று பாஜக கணக்கு போடுவதாக சொல்கிறார்கள். இதனால், திமுகவுக்கு செல்லும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை தடுப்பதற்காகவே, இப்படி ஒரு யுக்தியை, பாஜக முன்னெடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

திமுக ஓட்டுக்கள்: ஈரோடு இடைத்தேர்தலின்போது, பிரச்சார நேரத்தில் மட்டும் பாஜகவினரை அதிமுக மேலிடம் தவிர்த்த நிகழ்வை இந்த தமிழகமே பார்த்தது.. இப்போது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும், கூட்டணியை முறித்துவிடுவதால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுகவால் வெல்ல முடியுமா? திமுகவுக்கு செல்லவிருக்கும் முஸ்லிம் ஓட்டுக்களை தடுத்துவிட முடியுமா?? ஓவைசி மூலம் வாழ்த்து கிடைத்தாலும், முஸ்லிம் ஓட்டுக்கள் அதிமுகவுக்கு வந்துவிடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+